Jul 25, 2024
BY: mukesh M, Samayam Tamilஇலங்கை கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படும் சுவையான அல்வா ஒன்றினை கற்கண்டு, ரவை மற்றும் சில பொருட்கள் கலவையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
ரவை - 1 கப் | நெய் - ½ கப் | கற்கண்டு - 1 கப் | வெல்லம் - 1 கப் | ஏலக்காய் - 2 | சர்க்கரை - 1 ஸ்பூன்
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட கற்கண்டு மற்றும் வெல்லத்தை தனித்தனியே பொடியாக இடித்து தயாராக எடுத்து வைக்கவும்.
Image Source: istock
தொடர்ந்து மிக்ஸி ஜார் ஒன்றில் சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்த்து பொடியாக அரைத்து தனியே தயாராக எடுத்து வைக்கவும்.
Image Source: pexels-com
தற்போது அல்வா தயார் செய்ய கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து நன்கு உருக காத்திருக்கவும். இதனிடையே மற்றொரு கடாயில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
Image Source: istock
பின் இதனுடன் ரவை சேர்த்து (மிதமான சூட்டில்) கிளறி, பகுதியளவு வேகும் வரை காத்திருக்கவும். பின் அடுத்த கடாயில் கொதிக்கும் நீரை இதனுடன் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
Image Source: istock
தொடர்ந்து இதனுடன் பொடியாக இடித்து வைத்த வெல்லம், கற்கண்டு சேர்த்து கிளறவும். வெல்லம், கற்கண்டு சேர்மங்கள் நன்கு கரையும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.
Image Source: istock
இச்சேர்மம் நன்கு கரைந்த நிலையில் 3 - 4 ஸ்பூன் அளவுக்கு நெய் சேர்த்து நன்கு கிளறவும். இதன் போது அடுப்பில் மிதமான வெப்பநிலையில் இருப்பது அவசியம்!
Image Source: istock
பின் இறுதியாக இதனுடன் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான கற்கண்டு அல்வா ரெடி!
Image Source: istock
Thanks For Reading!