Jul 11, 2024
தொதல் (அ) தொடோல் எனப்படுவது இலங்கையில் பரவலாக கிடைக்கும் இனிப்பு ஆகும். தோற்றத்தில் அல்வா போன்று இருக்கும் இந்த தொதலை மிகவும் எளிமையாக தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
தேங்காய் மூடி - 2 | நாட்டு சர்க்கரை - 2 கப் | அரிசி மாவு - 1 கப் | நெய் - தேவையான அளவு | ஏலக்காய் - 3 | முந்திரி - 1 கைப்பிடி
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட தேங்காயை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்த்து விழுதாக அரைத்து பின் பால் வடிவில் பிரித்து எடுக்கவும். தொதல் செய்ய நமக்கு 2 கிளாஸ் அளவு தேவைப்படும்.
Image Source: pexels-com
தொடர்ந்து மற்றொரு மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் அளவு சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்த்து பொடியாக அரைத்து தனியே தயாராக எடுத்து வைக்கவும்.
Image Source: istock
பின் கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நெய்யுடன் முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து தனியே தயாராக எடுத்து வைக்கவும்.
Image Source: istock
தற்போது தொதல் தயார் செய்ய பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் பாலுடன் அரிசி மாவு சேர்த்து கட்டிகள் இல்லா வகையில் கிளறிக்கொண்டே இருக்கவும்.
Image Source: istock
பின் இதனுடன் தேங்காய் பாலில் பிரித்து எடுத்த திப்பை மற்றும் சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் கிளறிக்கொண்டே இருக்கவும். சர்க்கரை நன்கு கரைந்து பிரியும் வரை கிளறவும்.
Image Source: istock
தொடர்ந்து இதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு மற்றும் 3 ஸ்பூன் அளவு நெய் சேர்த்து அல்வா பதத்திற்கு திரும்பும் வரை கிளறிக்கொண்டே இறுக்கவும்.
Image Source: istock
இறுதியாக இதனுடன் ஏலக்காய்பொடியையும் சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி ஆற விட சுவையான இலங்கை தொதல் ரெடி!. சுட சுட ஒரு கோப்பையில் வைத்து ருசியாக பரிமாறுங்கள்!
Image Source: istock
Thanks For Reading!