[ad_1] இளநரைமுடி பிரச்சனையை நீக்க உதவும் பீட்ரூட்

Aug 1, 2024

இளநரைமுடி பிரச்சனையை நீக்க உதவும் பீட்ரூட்

Nivetha

நரைமுடி பிரச்சனை

தற்போதைய அவசர உலகில் மாறி வரும் உணவு வழக்கம், சூழ்நிலை உள்ளிட்டவை நமது உடல் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது. இதனுள் ஒன்று தான் இந்த இளம்வயதில் ஏற்படும் இளநரை பிரச்சனை. இதற்கான தீர்வு என்னவென்று இப்பதிவில் காண்போம்.

Image Source: istock

பீட்ரூட்

காய்கறிகளுள் பீட்ரூட் அதிகளவில் பயனளிக்கிறது, இதனை உணவில் அடிக்கடி சேர்த்து கொண்டால் நமது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது. சரும ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கும் இந்த பீட்ரூட் கூந்தல் ஆரோக்கியத்திற்கும் நன்மையளிக்கிறது. இந்நிலையில் இளநரை பிரச்சனையை தீர்க்க பீட்ரூட் எப்படி உதவுகிறது என்று பார்ப்போம்.

Image Source: istock

தேவையான பொருட்கள்

ஒரு பீட்ரூட், ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் ஆகியவற்றை எடுத்து கொள்ளுங்கள். பீட்ரூட்டை எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்சியில் நன்றாக அரைத்து பேஸ்டாக அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் ஊற்றி நன்கு கலக்கி கொள்ளுங்கள்.

Image Source: istock

முடியில் தடவவும்

அந்த பேஸ்ட்டை எடுத்து நரைமுடி இருக்கும் பகுதிகளில் நன்கு தடவவும், பின்னர் 1 மணிநேரம் அதனை அப்படியே உலர விடுங்கள். அதன் பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் தலையை நன்கு அலசி கொள்ளுங்கள்.

Image Source: istock

வாரம் இருமுறை

இம்முறையை நீங்கள் வாரத்திற்கு 2 முறை தவறாமல் பயன்படுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்கள் இளநரை முடி மீண்டும் கருப்பாக மாற துவங்கும். இது முற்றிலும் இயற்கை முறையான சிகிச்சை என்பதால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது.

Image Source: istock

பீட்ரூட்டின் நன்மைகள்

நமது தலைமுடி வளர்ச்சியடையவும், கருமையான நிறம் பெறவும் கொலாஜன் அவசியம். இந்நிலையில் பீட்ரூட்டில் வைட்டமின் சி அதிகமுள்ளது, இந்த வைட்டமின் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்க செய்கிறது. அதனால் இது இளநரையை கருமையாக்க உதவுகிறது.

Image Source: istock

ரத்த ஓட்டம்

பீட்ரூட்டிலுள்ள அதிகளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுக்கள் நிறைந்துள்ளன. இது நமது உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் நமது முடியின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. பீட்ரூட் ஜூஸை நமது தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவினால் நல்ல பலன் கிட்டும்.

Image Source: istock

பீட்ரூட் தோல்

பீட்ரூட் போலவே அதன் தோள்களிலும் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதனால் இதன் தோலை தலைமுடியில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் பொடுகு பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும், முடி வளர்ச்சியையும் மேம்படுத்தும்.

Image Source: istock

hair wash shampoo

பீட்ரூட் தோலை நன்கு சுத்தமாக கழுவி எடுத்து அதனை பியூரி செய்து அதில் தேவையான அளவு தயிர் சேர்த்து தலைமுடியில் ஹேர் மாஸ்க் போல் தடவுங்கள். 30 நிமிடங்கள் கழித்து ரசாயனம் கலக்காத இயற்கை ஷாம்ப்பூ பயன்படுத்தி தலைமுடியை கழுவுங்கள். இதுவும் பொடுகு போன்ற இதர பிரச்சனைகளை சரி செய்யும்.

Image Source: pexels

Thanks For Reading!

Next: கரும்புள்ளி, வெண்புள்ளி போக்கும் கடலை மாவு ஸ்க்ரப்!

[ad_2]