Aug 12, 2024
மனுகா தேன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் காணப்படும் ஒரு வகை தேனாகும். இது மனுகா புஷ் என்று அழைக்கப்படும் லெப்டோஸ்பெர்மம் ஸ்கோபேரியம் (எல்.ஸ்கோபேரியம்) பூவை மகரந்தச் சேர்க்கை செய்யும் தேனீக்களால் உற்பத்தி செய்யப்படுகிறது.
Image Source: istock
மனுகா தேனில் மெத்தில் கிளையாக்சலை என்ற மூலப்பொருள் உள்ளது. இந்த பொருள் தொண்டை புண்ணை ஆற்றவும், சருமத்தை புத்துணர்ச்சியுடன் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதில் ஆன்டி வைரஸ் பண்புகள் உள்ளன.
Image Source: istock
மற்ற தேன்கள் பல்வேறு மலர்களில் இருந்து பெறப்படுகிறது. ஆனால் இந்த மனுகா தேன் மட்டும் மனுகா பூக்களில் இருந்து மட்டும் பெறப்படுகிறது. இதில் அத்தியாவசிய தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளன.
Image Source: istock
உங்களுக்கு வறண்ட வெடிப்பான சருமம் இருந்தால் மனுகா தேனை பயன்படுத்தலாம். இது உங்கள் சருமத்தை மென்மையாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது சருமத்திற்கு உள்ளிருந்து ஈரப்பதத்தை அளிக்கிறது.
Image Source: pexels-com
மனுகா தேனில் வைட்டமின் பி3, துத்தநாகம், பொட்டாசியம், பீனால்கள் மற்றும் ஃப்ளவனாய்டுகள் உள்ளன. இவை சரும கோடுகளையும் சரும சுருக்கங்களையும் போக்குகிறது.
Image Source: istock
மனுகா தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. சரும செல்களை புதுப்பிக்கிறது. அந்த வகையில் மிருதுவான, பளபளப்பான சருமம் பெற உதவுகிறது!
Image Source: istock
மனுகா தேனில் உள்ள ஆன்டி கார்சினோஜெனிக் பண்புகள் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் மற்றும் தழும்புகளை குறைக்கிறது. சருமத்திற்கு இயற்கையான பொலிவை தருகிறது.
Image Source: istock
சருமத்திற்கு தேவையான கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. அதாவது, சரும செல்களில் கொலாஜன் கட்டமைப்பை மேம்படுத்தி இளமை தோற்றம் பெற உதவுகிறது!
Image Source: istock
மனுகா தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. இது சருமத்திற்கு உள்ளிருந்து போஷாக்கு அளிக்கிறது. இது சருமத்தை ஆரோக்கியமாகவும் ஹைட்ரேட்டிங் தன்மையுடன் வைத்திருக்க உதவுகிறது.
Image Source: istock
Thanks For Reading!