[ad_1] இளம் வயதினரை குறிவைக்கும் ‘Myopia பிரச்சனை’ - தடுப்பது எப்படி?

Aug 1, 2024

இளம் வயதினரை குறிவைக்கும் ‘Myopia பிரச்சனை’ - தடுப்பது எப்படி?

mukesh M

Myopia என்றால் என்ன?

Myopia எனப்படுவது கிட்டப்பார்வை பிரச்சனையை குறிக்கும் மருத்துவ மொழி. அதாவது, தொலைவில் உள்ள பொருட்களை காண்பதில் சிரமம் கொள்ளும் ஒரு வகை கண் பார்வை பிரச்சனையை நாம் Myopia என அழைக்கிறோம்!

Image Source: istock

காரணங்கள் என்ன?

கிட்டப்பார்வை பிரச்சனையின் மிக முக்கிய காரணமாக இருப்பது கண்கோளம் நீட்சி ஆகும். கண்களில் உண்டாகும் இந்த உட்புற மாற்றங்கள், உட் செல்லும் ஒளிக்கதிர்களை பாதித்து, கிட்டப்பார்வை பிரச்சனைக்கு வழிவகுக்கிறது!

Image Source: istock

எப்படி ஏற்படுகிறது?

நிபுணர்கள் கூற்றுப்படி இந்த கிட்டப்பார்வை பிரச்சனை ஆனது நம் வாழ்க்கை முறை மாற்றங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. அதாவது செயற்கை ஒளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது இந்த கிட்டப்பார்வை பிரச்சனைக்கு எளியில் வழிவகுக்கும்!

Image Source: istock

செயற்கை ஒளிகள் என்றால்?

இந்த செய்தியை படிக்க நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் (அ) மடிக்கணினி துவங்கி, தொலைக்காட்சி, LED விளக்குகள் என மின் சாதனங்கள் பலவும் செயற்கை ஒளிகளை உமிழ்ந்து இந்த கிட்டப்பார்வை பிரச்சனைக்கு வழிவகுக்கின்றன.

Image Source: istock

யாரை அதிகம் பாதிக்கிறது?

தகவல்கள் படி இந்த கிட்டப்பார்வை பிரச்சனை ஆனது 25 வயதுக்கு உட்பட்டவர்களை அதிகம் தாக்குகிறது. குறிப்பாக, ஸ்மாட்போன், தொலைக்காட்சி போன்றவற்றில் அதிகம் மூழ்கி இருக்கும் குழந்தை பருவத்தினரை இது அதிகம் பாதிக்கிறது.

Image Source: pexels-com

சிகிச்சை ஏதும் உண்டா?

இந்த கிட்டப்பார்வை பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண வாய்ப்பு குறைவு. இருப்பினும் இந்த பிரச்சனையின் தீவிரத்தை முறையான மருத்துவ சிகிச்சை, வாழ்க்கை முறை மூலம் தள்ளிப்போட முடியும்!

Image Source: istock

வருமுன் காப்பதே சிறந்தது!

இளம் வயதினர் அதிகம் எதிர்கொள்ளும் இந்த கிட்டப்பார்வை பிரச்சனையை தவிர்க்க (அ) தடுக்க, செயற்கை ஒளி பயன்பாட்டை குறைத்துக்கொள்வது அவசியம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Image Source: istock

இயற்கை ஒளியில் நேரத்தை அதிகம் செலவிடுங்கள்!

செயற்கை ஒளியை தவிர்த்து இயற்கை ஒளியில் (சூரிய ஒளி மற்றும் நிலவு ஒளியில்) நேரத்தை அதிகம் செலவிடுவது இந்த கிட்டப்பார்வையிம் தீவிரத்தை கட்டுப்படுத்த இயலும்!

Image Source: istock

இடைவெளியை கடைப்பிடியுங்கள்!

மடிக்கணினி போன்ற செயற்கை ஒளியை உமிழும் மின் சாதனங்களுடன் நெருங்கி பணியாற்றவேண்டிய அவசியத்தில் இருக்கும் நபர்கள், இந்த சாதனங்களுடன் போதுமான இடைவெளி மற்றும் இடைவேளை எடுத்துக்கொள்வது நல்லது!

Image Source: istock

Thanks For Reading!

Next: சிகரெட் பிடித்தால் மட்டுமே நுரையீரல் புற்றுநோய் வருமா? 8 கட்டுக்கதைகள் இதோ!

[ad_2]