May 22, 2024
வெங்காயம் கூந்தல் உதிர்தலை தடுக்கிறது. இது வழுக்கை தலை ஏற்படுவதை தடுக்கிறது. இதிலுள்ள சல்பர் மயிர்க்கால்கள் புதிதாக வளர உதவுகிறது. சல்பரில் கரோட்டீன் இருப்பது கூந்தல் கட்டுமானத்திற்கு உதவுகிறது.
Image Source: istock
2-3 வெங்காயம், ஒரு தேக்கரண்டி வெந்தய விதைகள் இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
2-3 புதிய வெங்காயத்தை எடுத்து அதனை தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். உங்கள் தலைமுடியின் நீளத்திற்கு ஏற்ப வெங்காயத்தின் அளவு இருக்கட்டும்.
Image Source: pexels-com
இப்பொழுது நறுக்கிய வெங்காயத்தை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது அதை வடிகட்டிக் கொள்ளுங்கள்.
Image Source: istock
வெங்காய சாற்றுடன் இந்த வெந்தய விதைகளை நன்றாக பொடி செய்து சேருங்கள்.
Image Source: istock
இப்பொழுது இந்த வெங்காய சாற்றை உச்சந்தலை மற்றும் முடியின் நீளம் வரை தடவ வேண்டும். முழுமையாக அப்ளை செய்த பிறகு ஷவர் கேப் கொண்டு மூடிக் கொள்ளுங்கள்.
Image Source: istock
1 மணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு கூந்தலை அலசிக் கொள்ளுங்கள். இது கூந்தல் வளர்ச்சிக்கும், கூந்தல் வலிமையாக வளரவும் உதவுகிறது.
Image Source: istock
வெங்காய சாற்றில் சல்பர், விட்டமின் ஈ மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது முடி நரைப்பதை தடுக்கிறது. கூந்தல் பளபளப்பாக இருக்க உதவுகிறது.
Image Source: istock
முதலில வெங்காய சாற்றை பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள். உங்களுக்கு எவ்விதமான அழற்சியும் ஏற்படாத பட்சத்தில், அதனை கூந்தலில் அப்ளை செய்யுங்கள்
Image Source: istock
Thanks For Reading!