[ad_1] இளைஞர்களை வதைக்கும் குழந்தையின்மை பிரச்சனை - காரணம் என்ன?

இளைஞர்களை வதைக்கும் குழந்தையின்மை பிரச்சனை - காரணம் என்ன?

May 11, 2024

By: mukesh M

கருவுறுதல் வாய்ப்பை குறைக்கும் காரணிகள்!

50-வது வயதுக்கு பின் விந்தணு வீரியம் குறைதல், குழைந்தை பாக்கியத்திற்கான வாய்ப்பு குறைதல் போன்ற பிரச்சனைகள் ஆண்களுக்கு இயல்பான ஒன்றாக இருக்கும் நிலையில், குறிப்பிட்ட இந்த வயதுக்கு முன்னரே இப்பிரச்சனை வருவதன் காரணங்கள் என்ன? என்பது குறித்து இங்கு

Image Source: istock

உடல் பருமன்!

தற்கால வாழ்க்கை முறை ஆனது உடல் இயக்கத்தை குறைத்து, ஒரே இடத்தில் அமர்ந்துபடி வேலை பார்க்கும் நிலைக்கு வழிவகுக்கிறது. இந்த நிலை ஆனது உடல் பருமனுக்கு வழிவகுப்பதோடு, விந்தணு வீரியத்தையும் குறைத்து, குழந்தையின்மைக்கு வழிவகுக்கிறது.

Image Source: istock

துரித உணவுகள்!

செயற்கை நிறமூட்டிகள், சுவையூட்டிகள் சேர்த்து தயார் செய்யப்படும் துரித உணவுகளின் அளவுக்கு மிகுதியான நுகர்வு ஆனது ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கிறது.

Image Source: istock

மன அழுத்தம்!

நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வரும் நவநாகரீக உலகில் மனிதர்களிடம் இருந்து பிரிக்க முடியாத ஒரு விஷயமாக மன அழுத்தம் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இளைஞர்களை விடாது ஒட்டிக்கொண்டு இருக்கும் இந்த மன அழுத்தம், ஹார்மோன் சமநிலையை தூண்டி, கருவுறுதல் வாய்ப்பையும் குறைக்கிறது.

Image Source: pexels-com

புகையிலை!

புகையிலை பொருட்களின் பயன்பாடு ஆனது உடல் உள் உறுப்பு சேதத்திற்கு வழிவகுப்போதடு, நரம்பு தளர்வு - விறைப்புத்தன்மை குறைபாடு வழிவகுக்கிறது. அந்த வகையில் இது குழந்தை பாக்கியத்தையும் தடுக்கிறது.

Image Source: istock

மதுபானம்!

புகையிலை போன்றே மதுபானத்தின் அளவுக்கு மிகுதியான பயன்பாடும் நரம்பு மண்டல ஆரோக்கியத்தை பாதிக்கிறது. நரம்பு மண்டல ஆரோக்கியத்தை பாதித்து, விறைப்புத்தன்மை குறைபாடு மற்றும் கருவுறுதல் பாதிப்பை உண்டாக்குகிறது.

Image Source: istock

செய்ய வேண்டியது என்ன?

ஆண்கள் தங்களின் கருவுறுதல் வாய்ப்பை அதிகரிக்க ஆரோக்கியமான உணவு வழக்கம், வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது அவசியம். குறிப்பாக, பாலுறவு ஆரோக்கியம் காக்கும் ஆரோக்கிய உணவுகளை உட்கொள்வது அவசியம்.

Image Source: istock

உடல் எடை மேலாண்மை!

கருவுறுதல் வாய்ப்பை அதிகரிக்க ஆரோக்கியமான உடல் எடையை பராமரித்தல் அவசியம். குறிப்பாக, தங்கள் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற (BMI) அளவில் எடையை பராமரிப்பது அவசியம்.

Image Source: istock

மருத்துவ உதவி நல்லது!

இளம் வயதில் உண்டாகும் இந்த குழந்தையின்மை பிரச்சனையை அலட்சியமாக விடுவது நல்லது அல்ல. முடிந்தளவுக்கு விரைவாக மருத்துவரை சந்தித்து வேண்டிய சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

Image Source: istock

Thanks For Reading!

Next: அப்பாவை விட அம்மாவை தான் குழந்தைகளுக்கு பிடிக்குமாம்! ஏன் தெரியுமா?

[ad_2]