Jul 23, 2024
தற்போதைய காலக்கட்டத்தில் தான் அழகு சாதன பொருட்கள் என்று பலவித பொருட்கள் சந்தையில் கிடைக்கிறது. நாமும் அதனை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். ஆனால் பண்டைய காலத்தில் இயற்கை பொருட்களை தான் அழகு சாதன பொருட்களாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
Image Source: istock
அப்படி ஒன்று தான் வெல்லம். வெல்லம் சமைக்க மட்டும் பயன்படுத்தாமல் அழகு சாதன பொருளாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இழந்த முக பொலிவை மீட்டு தருவதிலும், வேறு சில சரும பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் வெல்லம் இருக்கிறது. அது குறித்து இப்பதிவில் காண்போம்.
Image Source: istock
இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படும் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இதற்கு வெல்லம் ஒரு சிறந்த தீர்வாக இருக்க கூடும். ஏனெனில் வெல்லத்தில் ஆன்டி ஆக்சிடெண்ட்டுக்கள் உள்ளன, இது சருமத்தை பாதிக்கும் மூலக்கூறுகளுடன் போராடி வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது.
Image Source: istock
வெல்லம் நமது சருமத்தை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்திருக்கக்கூடிய இயற்கை மாய்ஸ்ச்சிரைஸராக செயல்படுகிறது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை மிருதுவாகவும், முகத்தை பொலிவாகவும் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.
Image Source: istock
வெல்லத்தை பயன்படுத்தும் பட்சத்தில் அதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகத்தில் ஏற்படும் பருக்கள், சரும எரிச்சல் உள்ளிட்டவைகளை எதிர்த்து போராடும். மேலும் முகத்திலுள்ள இறந்த செல்கள் நீக்கப்படுவதோடு, கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் மறையவும் உதவுகிறது.
Image Source: istock
ஒரு ஸ்பூன் வெல்லம், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலக்கி முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த ஃபேஸ் பேக் போடுவதன் மூலம் முகம் பளபளப்பாக மாறும்.
Image Source: istock
ஒரு ஸ்பூன் வெல்லம் , ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலக்கி முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 30 நிமிடங்களுக்கு பிறகு நீரில் கழுவவும். இந்த ஃபேஸ் பேக் போடுவதன் மூலம் முகம் இயற்கையான பளபளப்பினை பெறும்.
Image Source: istock
ஒரு ஸ்பூன் வெல்லம், ஒரு ஸ்பூன் தயிர் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலக்கி முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த ஃபேஸ் பேக் முகத்திற்கு இயற்கையான பொலிவினை கொடுக்கிறது.
Image Source: istock
வெல்லத்தை எப்பொழுதும் தனியாக பயன்படுத்துவது நல்லது. மற்ற ரசாயன பொருட்களோடு சேர்த்து பயன்படுத்தினால் சருமத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்த கூடும் என்று கூறப்படுகிறது. எனவே, ஃபேஸ் பேக் போட்டு வெல்லத்தை பயன்படுத்துவதே நல்லது.
Image Source: Samayam Tamil
Thanks For Reading!