May 16, 2024
விளக்கெண்ணெய் கண் இமைகளை அடர்த்தியாக வைக்க பயன்படுகிறது. இதில் ரிசினோலிக் அமிலம் உள்ளது. இது உங்கள் கண் இமைகளை அழகாக வைக்கும். கண் இமைகள் வறட்சியுடன் காணப்பட்டால் ஊட்டமளிக்க உதவுகிறது.
Image Source: istock
கண் இமைகளை சுத்தம் செய்த பிறகு 1 தேக்கரண்டி விளக்கெண்ணெயை எடுத்து பருத்தி துணியால் கண்களை ஒத்தி எடுங்கள். இரவு முழுவதும் எண்ணெயை விட்டு விட்டு காலையில் எழுந்ததும் கழுவுங்கள். கண்ணிற்குள் எண்ணெய் செல்வதை தவிருங்கள்.
Image Source: istock
விட்டமின் ஈ ஒரு கண்டிஷனர் மாதிரி செயல்படுகிறது. இது கண் இமைகளை அடர்த்தியாகவும், வலிமையாகவும் வளர உதவுகிறது. கண் இமைகள் உதிர்தலை தடுக்கிறது. கண் இமைகளுக்கு ஊட்டமளிக்கிறது.
Image Source: pexels-com
வைட்டமின் ஈ மாத்திரைகளை வாங்கி அதிலிருக்கும் எண்ணெயை கண் இமைகளில் அப்ளை செய்யுங்கள். கண் இமைகள் அடர்த்தியாக வளர உதவுகிறது.
Image Source: istock
ஷியா பட்டரில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது கொலாஜனை அதிகரிக்கிறது. ப்ரீ ரேடிக்கலில் இருந்து செல்களை காக்கிறது. கண் இமைகளில் உள்ள முடிகள் அடர்த்தியாக வளர உதவுகிறது.
Image Source: istock
ஷியா பட்டரை எடுத்து உருக்கி அதை கண் இமைகளில் தேயுங்கள். இரவு முழுவதும் அப்படியே விடுங்கள். காலையில் எழுந்ததும் கழுவி விடுங்கள். கண்களுக்குள் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் உள்ளது. இதை கண் இமைகளில் தேய்த்து வந்தால் உறிஞ்சப்பட்டு கண் இமைகள் வளர்ச்சி பெறுகிறது.
Image Source: istock
1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து கண் இமைகளில் காட்டன் பஞ்சைக் கொண்டு அப்ளை செய்யுங்கள். பிறகு காலையில் எழுந்ததும் மைல்டு சோப்பு கொண்டு கழுவுங்கள்.
Image Source: istock
க்ரீன் டீயில் ஃப்ளவனாய்டுகள் உள்ளன. இது கண் இமைகள் அடர்த்தியாக வளர உதவுகிறது. க்ரீன் டீ பேக்கை உங்கள் கண் இமைகளில் சிறிது நேரம் வைத்து வரலாம். இது உங்கள் கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறது. ஒரு நாளைக்கு 2 முறை க்ரீன் டீ குடியுங்கள்.
Image Source: istock
Thanks For Reading!