[ad_1] உங்கள் காபி-யை ஆரோக்கிய பானமாக மாற்றும் வழிகள்!

Aug 9, 2024

உங்கள் காபி-யை ஆரோக்கிய பானமாக மாற்றும் வழிகள்!

Suganthi

ஆரோக்கிய காபி!

பொதுவாக காபி குடிப்பது ஆரோக்கியமானது கிடையாது என்பார்கள். ஆனால் நீங்கள் குடிக்கும் காபியில் சில இயற்கையான பொருட்களை சேர்ப்பதன் மூலம் அதை ஆரோக்கியமானதாக மாற்றலாம்.

Image Source: pexels-com

இலவங்கப்பட்டையை சேருங்கள்

காபியில் சிறிது இலவங்கப்பட்டையை சேர்த்து குடித்து வரலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கான இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.

Image Source: istock

தேங்காய் எண்ணெய் சேர்க்கலாம்!

காபியில் தேங்காயெண்ணெய் கலந்து குடிப்பது எடையை இழக்க உதவுகிறது. வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. கல்லீரல் வேலையை மேம்படுத்த உதவுகிறது.

Image Source: istock

கோக்கோ பவுடர் சேருங்கள்!

கோக்கோ-வில் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது இதய நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது. எனவே காபியில் சிறிது கோக்கோ பவுடர் சேர்த்து குடிப்பது நல்லது.

Image Source: istock

அளவான சர்க்கரை!

காபியில் அதிகமான சர்க்கரையை சேர்த்தால் கலோரிகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே போதுமான அளவு மட்டுமே சர்க்கரையை சேருங்கள்.

Image Source: istock

சரி, எவ்வளவு பருகுவது?

அமெரிக்க உணவு மற்றும் மருந்து சங்கத்தின் கூற்றுப்படி, பெரியவர்கள் ஒரு நாளைக்கு 400mg அளவு மட்டுமே காபியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகப்படியாக காபி அருந்துவது பல்வேறு சிக்கல்களை உண்டாக்கும்.

Image Source: istock

எப்போது பருகுவது?

தூங்குவதற்கு முன்பு காபி குடிப்பது உங்கள் தூக்கத்தை கெடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே முடிந்த வரை படுக்கைக்கு 13.2 மணி நேரத்திற்கு முன்னதாகவே காபியை குடித்துக் கொள்ளுங்கள். அதே மாதிரி உடற்பயிற்சி செய்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக குடியுங்கள்.

Image Source: istock

எப்படி பருகுவது?

குளிர்ந்த காபி உங்களுக்கு மிகுந்த புத்துணர்ச்சியை அளிக்கலாம். ஆனால் இதில் சர்க்கரைகள் மற்றும் க்ரீம்கள் அதிகளவில் சேர்க்க வாய்ப்பு உள்ளது. எனவே சூடான காபியை தேர்ந்தெடுங்கள். இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் அதிகம்.

Image Source: istock

எந்த காபி நல்லது?

பொதுவாக அதிக சர்க்கரை போட்டு பால் காபி குடிப்பதை விட குறைவான கலோரி கொண்ட ப்ளாக் காபி குடிக்கலாம். அதே மாதிரி பசுவின் பாலை விட தாவர அடிப்படையிலான பால் குறைவான கலோரியைக் கொண்டுள்ளது.

Image Source: istock

Thanks For Reading!

Next: டயட்டிற்கு ஆம்லெட் நல்லதா இல்லை வேகவைத்த முட்டை நல்லதா ?

[ad_2]