Aug 19, 2024
By: Nivethaநம்முள் பலர் கிச்சனில் பயன்படுத்தப்படும் ஸ்க்ரப்களை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவீர்கள் என்று கேட்டால், அதற்கான பதில் நினைவில்லை என்று தான் கூறுவோம். பெரும்பாலும் நமது ஸ்க்ரப் அல்லது ஸ்பாஞ் சேதமடைந்தால் மட்டுமே நாம் அதனை மாற்றுகிறோம்.
Image Source: pixabay
ஆனால் இது மிகப்பெரிய தவறு என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் இதில் அதிகளவு பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் வாழ்வதாக ஆய்வுகள் கூறுகிறது. இது உங்கள் கழிப்பறை இருக்கையை விட ஆபத்தானவை என்றும் கூறப்படுகிறது.
Image Source: istock
இந்த ஸ்க்ரப்களில் அதிகளவு ஈகோலி, பிற மல பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளது, பலரும் இதனை 6 மாதங்களுக்கு ஒருமுறை தான் மாற்றுகிறார்கள். இதனால் இதிலிருக்கும் பாக்டீரியாக்கள் நமது குடல் நோய் மற்றும் தோல் சார்ந்த நோய்களை ஏற்படுத்துகிறது.
Image Source: pixabay
எனவே நாம் கிச்சனில் பயன்படுத்தும் ஸ்க்ரப்கள், ஸ்பாஞ்களை சுமார் 2 அல்லது 3 வாரங்களுக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இதன் மூலம் பல நோய் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாத்து கொள்ளலாம்.
Image Source: istock
கிச்சனில் இருக்கும் ஸ்க்ரப்கள் பெரும்பாலும் ஈரமான நிலையில் தான் இருக்கும். இதனால் உணவுகள் மற்றும் பாத்திரங்கள் வழியே நமது உடலுக்குள் உட்கொள்ளப்படும் நோய் கிருமிகள் பரவுவது அதிகமாகி, பல்வேறு நோய் ஏற்படுகிறது.
Image Source: istock
இது போன்று நோய்கள் பரவாமல் தடுக்க உங்கள் ஸ்க்ரப்களை அடிக்கடி மாற்றுங்கள். ஸ்பாஞ் என்றால் 2ல் இருந்து 3 வாரம் வரையும், கிச்சனில் பயன்படுத்தப்படும் பிரஷ்கள் மாதம் ஒருமுறையும் மாற்றுங்கள்.
Image Source: istock
ஒவ்வொரு முறையும் நீங்கள் ஸ்க்ரப் அல்லது ஸ்பாஞ்கள், பிரஷ்களை பயன்படுத்தியதும் அதனை நன்கு சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். சூடான நீரில் சோப்பில் கழுவி எடுத்து அதனை வெயிலில் வைத்து நன்கு உலர விட வேண்டும் என்பது அவசியம்.
Image Source: istock
உங்கள் ஸ்க்ரப்கள் மற்றும் பிரஷ்களை ப்ளீச் சொல்யூஷனில் 5 நிமிடங்கள் ஊறவைத்து கழுவினால் மிகவும் நல்லது. அதே போல், இந்த பொருட்களை மைக்ரோவேவ் அவனில் 1ல் இருந்து 2 நிமிடங்கள் வைத்து எடுப்பதன் மூலம் அதிலிருக்கும் பாக்டீரியாக்களை அழிக்க முடியும்.
Image Source: istock
உங்கள் ஸ்க்ரப்களை டிஷ் வாஷரில் வைப்பது மிகப்பெரிய தவறு, இது மென்மேலும் கிருமிகளை பரப்பும். ஸ்க்ரப்கள் உலர்ந்த இடத்தில் வைக்கப்பட வேண்டும், மேலும் இது உலர்ந்துள்ளதா என்பதை ஒவ்வொரு முறையும் உறுதி செய்து கொள்வதும் அவசியம் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
Image Source: pexels-com
Thanks For Reading!