[ad_1] உங்கள் குழந்தைகளை சமூகத்துடன் ஒன்றிணைப்பது எப்படி?

உங்கள் குழந்தைகளை சமூகத்துடன் ஒன்றிணைப்பது எப்படி?

May 20, 2024

By: Anoj

சமூகத்துடன் ஒன்றிணையும் வழிகள்

சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ சில குணநலன்கள் நமக்கு தேவைப்படுகிறது. இதனை குழந்தைகளுக்கு சிறிய வயதில் இருந்தே பெற்றோர்கள் கற்றுக்கொடுக்கலாம். அதற்கு உதவும் வழிகளை இங்கு பார்க்கலாம்

Image Source: pexels-com

குழுவுடன் ஒன்றிணைவது

தனிமையில் இருக்கும் குழந்தைகளின் மனநிலை குழுவாக இருக்கும்போது மாற்றமடைகிறது. உற்சாகத்தோடு சுறுசுறுப்பாகவும் செயல்பட உதவுகிறது. அது விளையாட்டு, அரட்டை, டிவி பார்ப்பது, சாப்பிடுவது என எந்த நிகழ்வாகவும் இருக்கலாம்.

Image Source: pexels-com

அடிக்கடி சந்திப்பு

சக நண்பர்கள் அல்லது நபர்களோடு குழந்தைகள் அடிக்கடி சந்திக்க முயற்சி செய்யுங்கள். இது எதிரே இருப்பவர்களின் பழக்க வழக்கங்கள், குணநலன்களை தெரிந்து கொள்வதோடு ஒருவரோடு எப்படி பேச வேண்டும், பேசக்கூடாது எனவும் கற்றுக்கொள்ள முடிகிறது.

Image Source: pexels-com

கவனம்

எதிரே அமர்ந்து பேசுபவர்களின் பேச்சுகளை கேட்பது, அந்த நேரம் எந்த வேலையும் செய்யாமல் இருப்பது, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது என சரியாக இருக்க குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். இது மரியாதை மற்றும் அன்பை அதிகரிக்கும்.

Image Source: pexels-com

வாழ்க்கை சூழல்

புத்தகங்கள், நன்னெறி கதைகள் படிக்க குழந்தைகளை பழக்கலாம். இது எப்படி தங்கள் வாழ்க்கை சூழலோடு ஒத்துப்போகிறது என்பதை அவர்களை வைத்தே விளக்க வைக்கலாம். இது வாசிப்பு திறன், சமூகத்தின் நிலை, வாழ்க்கை தத்துவம் ஆகியற்றின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள உதவுகிறது.

Image Source: pexels-com

சமாளிக்க கற்றுக்கொடுப்பது

சமூகத்துடன் பயணிக்க முயலும்போது கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் குழந்தைகள் திணறி விட வாய்ப்புள்ளது. அதற்காக அவர்களுக்கு புரியும் வகையில் விளக்கலாம். இது தெரியாத மனிதர்கள், விஷயங்களில் கவனமுடன் நடக்க உதவும்.

Image Source: pexels-com

கவனிப்பு

சந்தித்தோம்,பேசினோம் என இல்லாமல் உறவுகளை பேணுவது எப்படி என சொல்லிக் கொடுக்க வேண்டும். சிக்கல் ஏற்படும்போது எப்படி தீர்க்க வேண்டும், பிறருக்கு பிரச்சினை ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும் என கற்றுக்கொடுப்பதால் எப்போதும் உறவுகள் மீது கவனமும், பற்றும் இருக்கும்.

Image Source: pexels-com

கருணை சொல்லித்தாருங்கள்

அதிக பொருட்களை சுமந்து வருபவர்களுக்கு கதவை திறந்து கொடுப்பது, வயதானவர்களுக்கு இருக்கை அளிப்பது, நண்பனுக்கு வீட்டு பாடத்தில் உதவி செய்வது போன்ற இரக்கம் வெளிப்படுத்தும் செயலில் ஈடுபட குழந்தைகளுக்கு ஊக்குவியுங்கள்

Image Source: pexels-com

வெளிப்படையாக செயல்படுவது

சரியோ, தவறோ எந்த சூழலிலும் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க குழந்தைகளை பழக்க வேண்டும். அதேசமயம் நான் போட்டியில் பின்னடைவை சந்தித்தாலும் வெற்றி பெற்றவர்களை மனதார பாராட்ட வேண்டும் என சொல்லிக் கொடுக்க வேண்டும்.

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: கருப்பையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் வாழ்க்கை முறை மாற்றங்கள்!

[ad_2]