Jun 7, 2024
By: Pavithraகட்டிப்பிடிப்பது அன்பை வெளிப்படுத்தும் ஒரு செயல் என்பதையும் தாண்டி, உங்கள் குழந்தைகளைக் கட்டிப்பிடிப்பது ஆச்சரியப்படுத்தும் பல நிரூபிக்கப்பட்ட நன்மைகளை வழங்குகிறது. அதை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்
Image Source: pexels-com
கட்டிப்பிடிப்பது dopamine, serotonin மற்றும் oxytocin போன்ற ஹார்மோன்களை வெளியிடுவதால் மகிழ்ச்சியான உணர்வுகளை அதிகரித்து உங்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள பிணைப்பை வலுப்படுத்தும்.
Image Source: pexels-com
Oxytocin மன அமைதியை அளிப்பதால் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைச் சீர்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். உங்கள் குழந்தையை அமைதிப்படுத்த அன்பான ஒரு அரவணைப்பே போதும்.
Image Source: pexels-com
குழந்தைகளைக் கட்டிப்பிடிக்கும் போது உடலுடன் உடல் தொடுவதால் ஏற்படும் உணர்ச்சி தூண்டலானது அவர்களின் ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
Image Source: pexels-com
கட்டிப்பிடித்தல் குடும்பத்தில் அன்பான மற்றும் அக்கறையுள்ள சூழல் இருப்பதைக் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டுகிறது. இது வாழ்க்கை மீதான நம்பிக்கையான கண்ணோட்டத்தை வளர்க்க உதவுகிறது.
Image Source: pexels-com
உடலில் கவலைகளை ஏற்படுத்தும் ஹார்மோன் அளவை கட்டிப்பிடித்தல் குறைப்பதன் மூலம் மன அழுத்தத்தையும் குறைக்கிறது. எனவே, குழந்தைகள் கவலையாக இருந்தால் அழுத்தமான ஒரு அரவனைப்பை தாருங்கள் போதும்.
Image Source: pexels-com
குழந்தைகளைக் கட்டிப்பிடிப்பது தன்னம்பிக்கையையும், சுய மதிப்பையும் அதிகரிக்கும். அவர்கள் மதிக்கப்படுவதையும், கொண்டாடப்படுவதையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும்.
Image Source: pexels-com
கட்டிப்பிடிப்பது endorphin உற்பத்தியை அதிகரித்து உடல் பிரச்சனைகளை எளிதில் சரி செய்யும். இது சிறந்த இயற்கை வலி நிவாரணி ஆகும்.
Image Source: pexels-com
குழந்தைகளை அடிக்கடி கட்டிப்பிடிப்பது மற்றவர்களின் உணர்வுகளை அடையாளம் காண அவர்களுக்குக் கற்றுத்தரும். இது அவர்களிடம் கருணை எண்ணத்தையும் பச்சாதாபத்தையும் வளர்க்கிறது.
Image Source: pexels-com
Thanks For Reading!