May 4, 2024
பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு நீச்சல் கற்று தருவதன் அவசியம் என்ன? எந்த வயதில் நீச்சல் கற்று தர வேண்டும்? நீச்சல் கற்றுத்தரும் முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன? என்பது பற்றி இங்கு நாம் காணலாம்.
Image Source: pexels-com
நீச்சல் பயிற்சி என்பது சுவாச மண்டலம், நரம்பு மண்டலம் என உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பயன் அளித்து, ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும் ஒரு பயிற்சி என்பதால், குழந்தைகள் தங்கள் சிறு வயது முதலே நீச்சல் பழகுவது நல்லது.
Image Source: pexels-com
நிபுணர்கள் கூற்றுப்படி குழந்தைகள் தங்கள் 6 - 12 மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இருந்து பெற்றோர் உதவியுடன் நீச்சல் பழகலாம். அதாவது, குழந்தைகள் 1 வயது நெருங்கும் காலத்தில் இருந்து நீச்சல் பழக்கிவிடலாம்.
Image Source: pexels-com
உங்கள் குழந்தைக்கு நீச்சல் பழக்க துவங்கும் இடம் ஆனது பலர் பயன்படுத்தும் நீச்சல் குளமாக இருப்பது கூடாது. குறைந்தளவு தண்ணீர் கொண்ட தனிப்பயன்பாட்டு இடமாக இருப்பது நல்லது!
Image Source: pexels-com
பொது நீச்சல் குளங்களில் பயன்படுத்தும் குளோரின் போன்ற வேதி பொருட்கள் குழந்தைகளின் சருமம் மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். எனவே, சுத்தமான நீர் கொண்ட சிறிய குளத்தில் நீச்சல் கற்றுத்தாருங்கள்.
Image Source: pexels-com
குழந்தைகளுக்கு நீச்சல் கற்று தருவதற்கு முன், அவர்களை நீரோடு பழக முதலில் அனுமதியுங்கள். இத்தகைய பயிற்சிகள் ஆனது, நீரின் மீது உள்ள அச்சங்களை குறைக்க உதவும்.
Image Source: pexels-com
இதேப்போன்று நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரின் வெப்பநிலை 32℃ நெருங்கிய அளவில் இருப்பது நல்லது. நீரின் வெப்பநிலை குறைவாக (அ) அதிகமாக இருப்பது, குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.
Image Source: pexels-com
குழந்தைகளை நீரில் இறக்கும் போது, அவர்கள் நீரில் மூழ்காத வண்ணம் பாதுகாப்பு உறைகள், காற்றடைத்த பைகள் கொண்டு அவர்களை பாதுகாப்பது அவசியம் ஆகும்.
Image Source: pexels-com
குறிப்பிட்ட இந்த முயற்சிகளின் போது உங்கள் குழந்தைகள் நீச்சல் கற்க சிரமப்படுகிறார்கள் எனில், உங்கள் முயற்சிகளை சிறிதும் தயக்கமின்றி தள்ளிபோடுவதில் தவறு இல்லை. காலம் வரும் போது மீண்டும் முயற்சிக்கலாம்!
Image Source: pexels-com
Thanks For Reading!