[ad_1] உங்கள் குழந்தை புத்திசாலியாக வளரனுமா? அப்போ இதை படிங்க!

உங்கள் குழந்தை புத்திசாலியாக வளரனுமா? அப்போ இதை படிங்க!

Aug 13, 2024

By: Suganthi

காலை நேரம்!

காலை நேரம் நமக்கு எப்பொழுது பார்த்தாலும் பறபறக்கும் நேரமாக இருக்கலாம். ஆனால் காலை நேரத்தை நாம் சரியாக கையாள்வதன் மூலம் உங்கள் குழந்தைகளை புத்திசாலித்தனமாக வளர்க்கலாம்.

Image Source: istock

ஆரோக்கியமான காலை உணவு!

காலை உணவு என்பது மிகவும் முக்கியம். காலை உணவு சத்தானதாக இருக்க வேண்டும். இது மூளைக்கு எரிபொருளாக செயல்படுகிறது. எனவே குழந்தைகளுக்கு முழு தானியங்கள், பழங்கள் மற்றும் புரத உணவுகளை கொடுக்கலாம்.

Image Source: istock

உடற்பயிற்சி!

காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்வது மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. செறிவு மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்கிறது. எனவே குழந்தைகள் ஜாக்கிங், ஓடுதல் மற்றும் சிறு விளையாட்டை மேற்கொள்ளலாம்.

Image Source: istock

காலையில் படிக்க வையுங்கள்!

காலையில் எழுந்ததும் படிப்பது குழந்தைகளின் அறிவாற்றல் திறனை மேம்படுத்துகிறது. குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப புத்தகங்களை தேர்ந்தெடுத்து படித்து வரலாம்.

Image Source: pexels-com

தியானம்!

காலையில் எழுந்ததும் ஆழ்ந்த சுவாசம் மற்றும் தியானம் போன்ற சுவாச பயிற்சிகளை மேற்கொண்டு வரலாம். இது குழந்தைகளின் மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறது.

Image Source: istock

இலக்குகளை அமையுங்கள்

காலையில் எழுந்ததும் இலக்குகளை அமைத்து அதன் படி செயல்படலாம். இது திட்டமிடல் திறன்களை வளர்க்க உதவுகிறது. நோக்கம் மற்றும் இலட்சியத்தை அடையும் எண்ணத்தை உருவாக்குகிறது.

Image Source: istock

புதிர் விளையாட்டுகள்!

மூளையை யோசிக்க வைக்கும் புதிர் விளையாட்டுகளை செய்யலாம். குறுக்கெழுத்து போட்டிகள், சுடோகு அல்லது நினைவாற்றல் விளையாட்டுகளை செய்யலாம்.

Image Source: istock

மொபைல் போன் நேரத்தை குறையுங்கள்!

குழந்தைகளின் கவனச் சிதறல்களை போக்க பள்ளிக்கு செல்வதற்கு முன்பு மொபைல் போன் பயன்பாட்டை குறையுங்கள். பள்ளிக்கு செல்வதற்கு முன்பு டீவி, லேப்டாப்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களின் செயல்பாட்டை குறையுங்கள்.

Image Source: istock

ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள்!

காலையில் எழுந்ததும் ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தல் போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாட்டில் ஈடுபடுங்கள். இது கற்பனைத் திறனையும் சிக்கலை தீர்க்கும் திறனையும் மேம்படுத்துகிறது.

Image Source: istock

Thanks For Reading!

Next: பார்வை திறனை மேம்படுத்த உதவும் ஒருசில யோகா ஆசனங்கள்

[ad_2]