[ad_1] உங்கள் சருமமும் இந்த நடிகைகள் போல்  பளபளப்பாக இருக்கனுமா? இதை ட்ரை பண்ணுங்க!

Jun 13, 2024

உங்கள் சருமமும் இந்த நடிகைகள் போல் பளபளப்பாக இருக்கனுமா? இதை ட்ரை பண்ணுங்க!

Anoj

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன் அழகு பராமரிப்பில் சன்ஸ்க்ரீன் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அவர் SPF கொண்ட மாய்ஸ்சரைசரை பயன்படுத்தாமல் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார். அதே மாதிரி சூடான தேங்காயெண்ணெயை கொண்டு சருமத்தை மசாஜ் செய்கிறார்.

Image Source: instagram-com/deepikapadukone

சோனாக்ஷி சின்ஹா

நடிகை சோனாக்ஷி சின்கா தன்னுடைய முகத்திற்கு பால் சார்ந்த ஸ்க்ரப்பை பயன்படுத்துகிறார். பாலில் அரைத்த பாதாம் மற்றும் கிராம்பு, மஞ்சள் ஆகியவற்றைக் கொண்ட ஃபேஸ் ஸ்க்ரப்பை பயன்படுத்துகிறார்.

Image Source: instagram-com/aslisona

ஐஸ்வர்யா ராய்

உலக அழகியான ஐஸ்வர்யா ராய், கடலை மாவு, வெள்ளரி மற்றும் தயிர் சேர்த்து முகத்திற்கு பயன்படுத்துகிறார். இது அவருக்கு இயற்கையான பளபளப்பை தருகிறது.

Image Source: instagram-com

அனுஷ்கா ஷர்மா

அனுஷ்கா ஷர்மா முகத்தை கழுவுவதற்கு க்ளீன்சரை பயன்படுத்துகிறார். சருமத்திற்கு ரோஸ் வாட்டர் மற்றும் வேப்பிலைகளை பயன்படுத்தி சரும அழகை மேம்படுத்துகிறார்.

Image Source: instagram-com/anushkasharma

சோனம் கபூர்

நடிகை சோனம் கபூர் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் லெமன் சேர்த்து கலந்து பயன்படுத்துகிறார். இது செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இளநீர், மோர் மற்றும் வெள்ளரிக்காய் சாற்றையும் பருகலாம்.

Image Source: instagram-com/sonamkapoor

எம்மா ஸ்டோன்

நடிகை எம்மா ஸ்டோன் தன்னுடைய சருமத்திற்கு திராட்சை விதை எண்ணெயை பயன்படுத்துகிறார். இந்த எண்ணெயில் விட்டமின் ஈ, ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் லினோலிக் அமிலங்கள் உள்ளன.

Image Source: instagram-com/emmstone

கரினா கபூர்

நடிகை கரினா கபூரின் முடி பளபளப்பாக இருப்பதற்கு காரணம் பாதாம் எண்ணெய், விளக்கு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தி கூந்தலை மசாஜ் செய்கிறார். இது கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது. வேக வைத்த காய்கறிகள், க்ரீன் டீ எடுத்துக் கொள்கிறார்.

Image Source: instagram-com/kareenakapoorkhan

கிம் கர்தாஷியன்

இவர் கரும்புள்ளிகளை போக்க இயற்கையான எக்ஸ்ஃபோலியட்டரை பயன்படுத்துகிறார். முதலில் சோப்பு அல்லது பாடி வாஷ் கொண்டு சருமத்தை கழுவிய பிறகு சர்க்கரை கொண்டு தேய்த்து வட்ட இயக்கத்தில் ஸ்க்ரப் செய்யுங்கள். இது சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது.

Image Source: instagram-com/kimkardashian

தியா மிர்சா

நடிகை தியா மிர்சாவின் அழகான கூந்தலுக்கு அவர் ஈரப்பதமிக்க கண்டிஷனரை பயன்படுத்துகிறார். மேலும் கூந்தலுக்கு பட்டரை பயன்படுத்துகிறார். கூந்தலில் பட்டரை தடவி 2 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்த வேண்டும்.

Image Source: instagram-com/diamirzaofficial

Thanks For Reading!

Next: முடி கருகருவென வளர விளக்கெண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை தேய்த்து பாருங்க!

[ad_2]