[ad_1] உங்கள் பணியை மாற்றுவதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

May 6, 2024

உங்கள் பணியை மாற்றுவதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

Anoj

பணி மாற்றம்

பணி மாற்றம் என்பது ஒவ்வொரு துறையிலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவசியமான ஒன்றாக மாறுகிறது. பயம் மற்றும் உற்சாகம் கலந்த மனநிலையுடனே பணியில் மாற்றம் காண்கிறோம். ஆனால் இத்தகைய மாற்றத்தின் போது சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Image Source: freepik-com

தெளிவான முடிவு

நீங்கள் பணியில் இருந்து மாறுவது ஏன் என்ற முடிவில் தெளிவாக இருக்க வேண்டும். பொருளாதாரம், புதிய சவால்கள், நிறுவன மாற்றம் என பலவகை காரணம் இருக்கலாம்.

Image Source: pexels-com

சுயமதிப்பீடு

ஒரு பணியில் இருந்து மாற்றம் காண்பதற்கு முன் அடுத்த வேலையில் அமர உங்களை நீங்களே சுயமதிப்பீடு செய்வது என்பது அவசியமாகிறது. நீங்கள் புதிதாக திறன்களை வளர்த்து கொண்டீர்களா அல்லது இருக்கும் திறனில் இருந்து கீழிறங்கி உள்ளீர்களா என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Image Source: pexels-com

நிறுவனம் பற்றி அறிதல்

நீங்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்துக்கு மாறுகிறீர்கள் என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனம் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்வது அவசியம். இது தவறான முடிவு எடுத்து விட்டமோ என்ற எண்ணத்தை தவிர்க்கும்.

Image Source: pexels-com

எதிர்பார்ப்புகள்

உண்மையில் நீங்கள் புதிய பணியிடங்களுக்கு செல்லும்போது அளவுக்கு மீறிய எதிர்பார்ப்போடு அணுக வேண்டாம். சம்பள உயர்வில் இருந்து பணி சூழல் வரை யதார்த்த நிலைகளை புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

Image Source: pexels-com

புதிய முயற்சி

நீங்கள் ஒரு பணியை மேற்கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் அதற்காக சில விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். மொழி படிப்புகள், கணினி சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

Image Source: pexels-com

தொடர்பு முக்கியம்

நீங்கள் புதிய பணியை நாட விரும்பினால் அதற்கான நெட்வொர்க் அமைப்பை உருவாக்கி தேடும்போது எளிதாக கண்டறியலாம். எந்த தொழிலாக இருந்தாலும் அத்துறை சார்ந்த நபர்களின் தொடர்புகளை வளர்த்துக் கொள்வது அவசியமாகும்.

Image Source: pexels-com

நிதி விஷயங்களை சிந்திக்கவும்

பணி மாறுவது சாதாரண விஷயம் என்றாலும் அது குறிப்பிட்ட சில காலம் உங்கள் நிதி நெருக்கடியை உண்டாக்கலாம். அதனை சமாளிக்க உங்களிடம் என்ன திட்டம் இருக்கிறது என்பதை யோசித்து கொள்ளவும்.

Image Source: istock

மன நிறைவான வேலை

மன திருப்தியான வேலை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் பணியை தேடலாம். இது உடலளவிலும், மனதளவிலும் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: NEET தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கட்டாயம் முயற்சிக்க வேண்டியவை!

[ad_2]