May 14, 2024
By: Anojபணி, சந்திப்புகள், ஆலோசனை கூட்டம் என எதுவாக இருந்தாலும் சரியான நேரத்தை கடைபிடிப்பதை உறுதி செய்யுங்கள். இது மற்றவர்களின் நேரத்தையும் நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும்.
Image Source: pexels-com
உங்கள் நிலை கடினமாக இருந்த காலக்கட்டத்திலும் நேர்மையை கடைபிடியுங்கள்.கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் இருப்பது உங்கள் மீதான மரியாதையை அதிகப்படுத்தும்.
Image Source: pexels-com
உங்களுக்கு கொடுக்கப்படும் வேலைகளில் பொறுப்புணர்வாக செயல்படுங்கள். தவறு நிகழ்ந்தால் அதனை ஏற்றுக்கொண்டு சரி செய்ய முயற்சிக்கவும். அதேபோல் வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் பொறுப்புடன் கடைசி வரை முயற்சி செய்ய வேண்டும்.
Image Source: pexels-com
உங்கள் பணி சார்ந்தோ அல்லது பொதுவான விஷயங்களிலோ நிறைய தகவல்கள் தெரிந்து வைத்து கொள்வது நல்லது. இது நேர்மையான மனிதராக உங்களை வெளிப்படுத்தும். மரியாதையை மென்மேலும் உயர்த்தும்.
Image Source: pexels-com
எந்த பிரதிபலன் பார்க்காமல் உங்களின் நேரம், ஆற்றல், பொருளாதார உதவிகள் போன்றவற்றை மற்றவர்களுக்கு கொடுக்கும்போது ஒருவருடைய அன்பையும், மரியாதையும் பெற முடியும்.
Image Source: pexels-com
எத்தகைய கடின சூழல் இருந்தாலும் உணர்ச்சி வசப்படுதல், தவறான பாதையில் செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. முழு அர்ப்பணிப்பு மற்றும் சுய ஒழுக்கத்தை உருவாக்ககூடிய வகையில் செயல்பட வேண்டும்.
Image Source: pexels-com
சில இடங்களில் நாம் தைரியமாக பேச வேண்டும். இது எதிர்த்து பேசும் வகையில் வராது என புரிந்து கொள்ள வேண்டும். அதேசமயம் தேவைப்படும் பட்சத்தில் தவறுகளை தட்டி கேட்க வேண்டிய இடத்தில் இதனை செயல்படுத்தவும்.
Image Source: pexels-com
ஒரு வேலை என்பது குழுவினருடன் சேர்ந்து செய்யும்போது எளிதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் நம்பிக்கை, தொடர்பு, சக நபர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வது போன்றவையும் இருக்கும். இது பரஸ்பர மரியாதை நம் மீது உண்டாக்கும்.
Image Source: pexels-com
உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவியவர்கள், உங்களின் சிறந்த அனுபவத்திற்கு காரணமானவர்களுக்கு எப்போதும் நன்றி உணர்வுடனோ, அல்லது நன்றி தெரிவிக்கும் பழக்கத்தையோ வளர்த்துக்கொள்ள வேண்டும்.
Image Source: pexels-com
Thanks For Reading!