May 3, 2024
By: Anojநல்ல தகவல் தொடர்பு, உறவில் நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது. இது ஆரோக்கியமான உறவுக்கான அடித்தளமாக அமைகிறது. இந்தப் பதிவில், தகவல் தொடர்பு மோசமான நிலையில் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளை விரிவாக காணலாம்
Image Source: pexels-com
உறவில் தகவல் தொடர்பு சீராக இல்லை என்றால், சிறிய மனக்கசப்பு கூட முழுமையான வாக்குவாதமாக மாறக்கூடும். பிறர் சொல்வதை காது கொடுத்து கேட்காத பட்சத்தில், வாக்குவாதங்கள் ஒருபோதும் முடிவுக்கு வர செய்யாது
Image Source: pexels-com
ஒரு விஷயத்தை பற்றி துணையிடம் நேரடியாக கேட்பதற்கு பதிலாக, அவரது உணர்ச்சிகள், எண்ணங்கள் அல்லது நோக்கம் அப்படி தான் இருக்கும் என அனுமானம் செய்வார்கள். இது தவறான புரிதல்களுக்கு வழிவகுத்து பேசுவதில் தடையை உண்டாக்கக்கூடும்
Image Source: pexels-com
மோதல் அல்லது வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும் உரையாடலை தவிர்த்திட, அங்கிருந்து விலகி செல்லும் தந்திரத்தை ஒருவர் அல்லது இருவரும் பின்பற்ற செய்வார்கள். இது தகவல்தொடர்பு விரிசலை மோசமாக்க செய்யலாம்.
Image Source: pexels-com
உங்க துணையுடன் நல்ல தரமான நேரத்தை செலவிட தவறினால், அதன் தாக்கம் தகவல் தொடர்பிலும் இருக்கக்கூடும். பிற விஷயங்களில் கவனம் செலுத்துகையில் உறவின் மதிப்புமிக்க உரையாடல்கள் குறையக்கூடும்
Image Source: pexels-com
உங்களுடனான உரையாடல் சரியாக இல்லாத போது, அவர்களது எண்ணங்களை நடத்தையில் சில மாற்றங்கள் மூலம் வெளிப்படுத்துவார்கள். புகழ்வது போல் மறைமுகமாக இகழ்ச்சி செய்வது, திடீரென அமைதியாகுவது அல்லது அதிருப்தி வெளிப்படுத்தும் முகபாவனைகளை கொண்டிருப்பார்கள்
Image Source: istock
வாக்குவாதம் அல்லது கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை எனில், அவை கடைசி வரை தீர்க்கப்படாத பிரச்சனையாகவே இருக்கும். இது இருவருக்கும் இடையே உணர்ச்சி ரீதியான இடைவெளியை உண்டாக்கும்
Image Source: istock
மோசமான தகவல் தொடர்பு, தம்பதிக்குள் ஒருவர் மீது ஒருவருக்கு உணர்ச்சி ரீதியான பந்தம் இருப்பதை குறைக்க செய்யலாம். இது உடல் ரீதியான நெருக்கம் மற்றும் உணர்ச்சிகரமான ஆதரவை பாதிக்க செய்யலாம்
Image Source: istock
முதலில் துணை சொல்வதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அதேபோல், துணையின் காதல் மொழியை கண்டறிய வேண்டும். குறிப்பாக, வாக்குவாதங்களை கிடப்பில் போடாமல் அவ்வப்போது தீர்க முயலுங்கள். நற்செயல்களை பாராட்டுவது, நன்றி சொல்வது போன்றவை தகவல் தொடர்பை வளர்க்க உதவும்
Image Source: istock
Thanks For Reading!