[ad_1] உங்க குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துகிறார்களா? - இதனை படியுங்க

உங்க குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துகிறார்களா? - இதனை படியுங்க

May 22, 2024

By: Anoj

குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள்

சமூக ஊடகங்களில் எப்படி இருக்க வேண்டும் என குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். மற்றவர்களின் தனிப்பட்ட உரிமைக்கு மதிப்பளித்தல் தொடங்கி உங்களின் தனிப்பட்ட விஷயத்தை பாதுகாப்பது வரை இதில் அடங்கும்

Image Source: istock

தகவல்களை ஆராய்வது

சமூக ஊடகங்களின் காண்பவைகளின் உண்மை தன்மையை ஆராயவும், கேள்வி கேட்கவும் பழக்க வேண்டும். தவறான விஷயங்களை பரப்பினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என சொல்ல வேண்டும்.

Image Source: pexels-com

நேர கட்டுப்பாடு

சமூக ஊடகங்களில் நேரம் காலம் பார்க்காமல் அனைவரும் மூழ்கியிருக்கிறோம். அது தவறானது. குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஏற்படும் என்பதால் அவர்களை அதிக நேரம் உபயோகிக்க பழக்காதீர்கள்.

Image Source: pexels-com

தனியுரிமை கடைபிடிப்பது

பல்வேறு சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும்போது தனியுரிமை கடைபிடிக்க பழக்குங்கள். உங்களின் பதிவுகளை யார் பார்க்கலாம், வரம்பு மீறி பேசுபவர்களை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும்.

Image Source: pexels-com

உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது

பிறர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமாக சமூக வலைத்தளங்ளை பயன்படுத்துவதால் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என தெரிவியுங்கள். வார்த்தைகளின் தாக்கம் எந்தளவுக்கு இருக்கும் என புரிய வைக்க வேண்டும்.

Image Source: pexels-com

ஆபத்து பற்றி எடுத்துரைக்கவும்

ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் அதன் ஆபத்து பற்றி குழந்தைகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆர்வத்தில் எதையாவது செய்யும்போது உயிரிழப்பு வரை அதன் விளைவுகள் இருக்கும் என சொல்ல வேண்டும்.

Image Source: istock

குழந்தைகளை பாராட்டுவது

சமூக ஊடகங்கள் நமது சிந்தனை, செயல்திறை வெளிப்படுத்தும் இடமாக திகழ்கிறது. ஆக்கப்பூர்வமான முறையில் இதனை பயன்படுத்தும்போது குழந்தைகளை பாராட்டவும். இச்செயல் அவர்கள் சமூக வலைதளத்தை நல்வழியில் மட்டும் பயன்படுத்த ஊக்குவிக்கும்

Image Source: pexels-com

கண்காணிப்பு அவசியம்

குழந்தைகள் சமூக ஊடகங்களில் என்ன பார்க்கிறார்கள், அவர்களின் நட்பு வட்டம் என அனைத்தையும் கண்காணிக்க வேண்டும். வயதுக்கேற்ற செயல்களை ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும்.

Image Source: pexels-com

உதாரணமாக இருங்கள்

சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக பெற்றோர்கள் செயல்பட வேண்டும். அவர்கள் முன்பு நீங்கள் தேவையற்ற விஷயங்கள் பார்ப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: கர்ப்ப காலத்தில் பெண்கள் சியா விதை உட்கொள்வது நல்லதா?

[ad_2]