Aug 16, 2024
By: Suganthiபெரியவர்களாகிய நாமே சோஷியல் மீடியாக்களால் நிறைய ஏமாறிகிறோம். இதில் குழந்தைகளுக்கு சோஷியல் மீடியா பற்றிய புரிதல் மிகக் குறைவாகவே உள்ளது. குழந்தைகள் எளிதாக சோஷியல் மீடியாவில் இருக்கும் அனைத்தும் உண்மை என நம்பி விடுகின்றனர்.
Image Source: pexels-com
சமூக ஊடகங்களில் காட்டப்படும் அனைத்தும் உண்மையல்ல என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்ல வேண்டும். குழந்தைகள் சோஷியல் மீடியாக்களில் அழகாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். மற்றவர்களைக் கண்டு பொறாமைப்படுகிறார்கள்.
Image Source: pexels-com
யார் சோஷியல் மீடியாவில் இருந்தாலும் மோசமான கருத்துக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே குழந்தைகளை முதலில் இதற்கு நீங்கள் தயார்ப்படுத்த வேண்டும். எதிர்மறை கருத்துக்களை காதில் போடாமல் மன உறுதியுடன் அதை எதிர்கொள்ள குழந்தைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
Image Source: pexels-com
பல குழந்தைகள் சோஷியல் மீடியாவில் அவர்கள் வாங்கும் லைக்ஸ் மற்றும் நேர்மறை கருத்துக்களுடன் சுய மதிப்பை இணைக்கின்றனர். எனவே ஊடகங்களில் நடக்கும் எதனுடனும் தங்கள் மகிழ்ச்சியை தொடர்புபடுத்தாமல் தெளிவாக இருக்க குழந்தைக்கு சொல்லிக் கொடுங்கள்.
Image Source: pexels-com
பெரும்பாலான நபர்கள் சோஷியல் மீடியாவில் புகைப்படங்களை அழகாக காட்ட ஃபில்டர்களை பயன்படுத்துகின்றனர். இதை நம்பி யாரையும் நம்ப வேண்டாம், அழகில் மயங்க வேண்டாம் மற்றும் தேவையற்ற அழகுப் பொருட்களை வாங்க வேண்டாம் என சொல்லிக் கொடுங்கள்.
Image Source: pexels-com
பல குழந்தைகள் எப்போது பார்த்தாலும் சோஷியல் மீடியாவே கதி என்று இருப்பார்கள். இதனால் அவர்களின் நேரம் மட்டுமல்ல ஒட்டுமொத்த வேலையும், படிப்பும் பாழாய் போக வாய்ப்பு உள்ளது. எனவே குறிப்பிட்ட நேரத்தை மட்டுமே பயன்படுத்த வலியுறுத்துங்கள்.
Image Source: pexels-com
குழந்தைகள் 24 மணி நேரமும் சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒவ்வொரு செய்திக்கும் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்பதை சொல்லிக் கொடுங்கள்.
Image Source: pexels-com
குழந்தைகள் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்புக்களை ஏற்க வேண்டாம். இதனால் முகம் தெரியாத நபர்களால் குழந்தைகள் சிக்கல்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. இதனால் வரும் பிரச்சனைகளை எடுத்துக் கூறுங்கள்.
Image Source: pexels-com
குழந்தைகள் என்ன தகவல்களை சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்துகிறார்கள் என்பதில் பெற்றோர்கள் கவனமாகவும் கண்டிப்பாகவும் இருக்க வேண்டும். அவர்களின் இருப்பிடங்கள் குறித்த தகவல்களை போடுவது ஆபத்துக்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
Image Source: pexels-com
Thanks For Reading!