May 7, 2024
By: mukesh Mகோடை வெயில் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது. அளவுக்கு மிகுதியான உஷ்ணம் ஆனது, பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் நிலையில், இதனை சமாளிப்பது எப்படி? என இங்கு காணலாம்!
Image Source: istock
பெரியவர்களை விட குழந்தைகள் தான் அதிக வெப்பத்தினால் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு இந்த வெயிலில் இருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்ற வழிகள் தெரியவில்லை. வெப்ப தாக்கத்தால் குழந்தைகள் இறக்க கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது.
Image Source: istock
குழந்தைகளை காரில் எடுத்துச் செல்லும் போது, அவர்கள் வெப்பத்தை சமாளிக்கும் வகையில், வெயில் படாதவாறு நீரேற்றமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். உடலில் இருந்து வெப்பம் வெளியேறும் வகையில் இலகுவான ஆடைகளை பயன்படுத்துங்கள்.
Image Source: istock
அதிக வெப்பத்தால் குழந்தையின் சருமமும் பாதிக்கப்படுகிறது. நீர் சத்து குறைபாடு, அதிக வெப்பத்தின் தாக்கம் போன்றவை குழந்தையின் சரும நிறத்தை சிவப்பாக மாற்றுகிறது. இது இயல்பு நிலைக்கு திரும்ப சிறிது நேரம் ஆகலாம்.
Image Source: istock
காரில் ஏசி பயன்படுத்தும் போது, பெரியவர்களின் வசதிக்கேற்ப டெம்பரேச்சரை சரி செய்யாமல், குழந்தையின் உடலுக்கு தேவையான வெப்பநிலையை வைத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
அடிக்கடி காற்றோட்டமாக இருக்க, காரின் ஜன்னல்களை திறந்து வைக்கவும். இது காரில் உள்ள வெப்பமான காற்று வெளியேற வழிவகுக்கும்.
Image Source: istock
குழந்தைகளுக்கு கோடை காலத்துக்கு ஏற்ற உடையை அணிய வேண்டும். குறிப்பாக பருத்திகளால் ஆன உடைகள் குழந்தைகளை வெப்ப தாக்குதலில் இருந்து பாதுகாக்கும்.
Image Source: istock
நீங்கள் காரில் பயணம் செய்யும்பொழுது உங்கள் குழந்தைக்கு தேவையான நீர் ஆதாரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி உங்கள் குழந்தைகள் தண்ணீர், பழச்சாறு அருந்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
Image Source: pexels-com
அதிக வெப்பத்தினால் உங்கள் குழந்தை அசௌகரியத்தை உணர்ந்தால், உடனடியாக காற்றோட்டமான இடத்தில் வைத்து நீர் பருக கொடுங்கள். பின்னர் தேவைப்பட்டால் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துங்கள்.
Image Source: istock
Thanks For Reading!