Jun 12, 2024
செரிமான அமைப்பு உணவை ஜீரணிப்பது மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அது சரியாக செயல்படவில்லை எனில், உடலில் சில மாற்றங்கள் உண்டாகக்கூடும். அவற்றை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்
Image Source: istock
எவ்வித காரணமும் இன்றி மனநிலை மாற்றத்தை உணரும் பட்சத்தில், அதற்கு செரிமான அமைப்பு காரணமாக இருக்கலாம். ஏனென்றால், மூளையை போலவே குடலிலும் நரம்பு மண்டலங்கள் இருக்க செய்கின்றன. இதன் காரணமாகவே, குடலை 2வது மூளை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
Image Source: istock
உடலின் 70 சதவீத நோய் எதிர்ப்பு சக்தி, குடலில் தான் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டால், அதற்கு செரிமான அமைப்பு மோசமாக இருப்பதும் அறிகுறியாகவும் இருக்கலாம்
Image Source: istock
இது செரிமான அமைப்பு சீராக செயல்படவில்லை என்பதன் பொதுவான அறிகுறியாகும். அதிகப்படியான வாயு காரணமாக, வயிறு வீங்கியிருப்பது போல் அல்லது இறுக்கமாக இருக்கக்கூடும்
Image Source: istock
எப்போதும் சோர்வாக இருப்பதும், செரிமான அமைப்பு சரியாக இல்லை என்பதன் அறிகுறியாகும். செரிமான மண்டலத்தால் ஊட்டச்சத்துகள் முறையாக உறிஞ்சிட முடியாத போது, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு சோர்வு உண்டாகக்கூடும்
Image Source: istock
கவனம் செலுத்துவதில் சிரமத்தை உண்டாக்கும் ப்ரெயன் ஃபாக் எனும் மூளை மூடுபனி அறிகுறிகள் தென்படக்கூடும். மூளைக்கும் குடலுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. குடல் ஆரோக்கியம் மோசமானால், அது அறிவாற்றல் செயல்பாடுகளை பாதிக்கக்கூடும்
Image Source: istock
உடலில் குறிப்பாக செரிமான அமைப்பில் ஏற்படும் பிரச்சனைகளை, சருமத்தில் உண்டாகும் மாற்றம் மூலம் எளிதாக தெரிந்துகொள்ளலாம். சருமத்தில் பருக்கள் உண்டானால், செரிமான அமைப்பில் வீக்கம் அல்லது உணவை பிராசஸ் செய்ய முடியவில்லை என்பதன் அர்த்தமாக இருக்கலாம்
Image Source: pexels-com
குடல் நுண்ணுயிரில் சமநிலையின்மை ஏற்பட்டால், சர்க்கரை உணவுகள் சாப்பிடுவதற்கான தூண்டுதல் ஏற்படக்கூடும். ஆனால், சர்க்கரை அதிகமாக உட்கொள்வது, குடல் நுண்ணுயிரிகளை மேலும் மோசமாக பாதிக்கக்கூடும்
Image Source: istock
உடல் எடை திடீரென அதிகரிப்பது கூட, மோசமான செரிமான அமைப்பின் அறிகுறியாகும். கொழுப்பை எரிக்கும் மெட்டபாலிசத்தில் குடல் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் சமநிலையின்மை உண்டானால், எடை அதிகரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது
Image Source: istock
Thanks For Reading!