Jul 22, 2024
By: Anojஉங்க டீனேஜ் குழந்தையுடன் வலுவான நட்புறவை வளர்ப்பது அவசியமாகும். இதன் மூலம் இருவருக்கும் இடையிலான பிணைப்பு வலுவாகக்கூடும். அதற்கு உதவும் டிப்ஸ் பற்றி இங்கு பார்க்கலாம்
Image Source: istock
உங்க மகன் அவரது எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை பகிர்கையில், எவ்வித குறுகீடும் செய்யாமல் கவனிக்க செய்யுங்கள். இது அவரது கருத்துகளுக்கு நீங்கள் மதிப்பளிப்பதை காட்டக்கூடும். மேலும், திறந்த உரையாடலுக்கும் வழிவகுக்கக்கூடும்
Image Source: istock
டீனேஜ் பருவத்தில் குழந்தைகளுக்கு பிரைவசி இருக்கக்கூடும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். அவரது அறைக்குள் செல்லும் முன்பு கதவை தட்டுங்கள். அதேபோல், அவரது மொபைல் போன் செக் செய்வதையும் தவிர்க்க வேண்டும்
Image Source: pexels-com
விளையாட்டு, பாடல் மற்றும் திரைப்படம் என எதுவாக இருந்தாலும், உங்க இருவருக்கும் பிடித்தமான விஷயங்களை அறிந்துகொள்ளுங்கள். ஒரே மாதிரியான விருப்பங்கள் இருவருக்கும் இடையே பிணைப்பை அதிகரிப்பதோடு நல்ல தரமான நேரத்தை செலிவிடுவதற்கான வாய்ப்பை அளிக்கிறது
Image Source: pexels-com
குழந்தைகளிடம் எல்லைகளை அமைத்து பின்பற்ற சொல்வது சிறந்த முடிவாகும். நீங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்காமல், அவர்களுடன் சேர்ந்து தெளிவான எல்லைகளை அமையுங்கள். இது பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலை ஊக்குவிக்கின்றன.
Image Source: istock
ஒரு விஷயத்தை பற்றி பேசுகையில் குழந்தைகளிடம் ஸ்ட்ரிக்டான ஆசிரியர் போல் நடந்துகொள்ளாதீர்கள். அவர்களிடம் ஆக்கப்பூர்வமான உரையாடலை மேற்கொள்ளும் வழிகாட்டியாக இருங்கள். அந்த விஷயத்தை சிந்தித்து முடிவு எடுக்க அறிவுறுத்துங்கள்
Image Source: unsplash-com
உங்க டீனேஜ் மகனின் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து உபசரிக்க செய்யலாம். அவர்களிடம் சிறப்பாக நடந்துகொள்வது, உங்களுக்கு மகனுக்கும் இடையே நம்பிக்கையை அதிகரிக்கக்கூடும்
Image Source: pexels-com
குழந்தைகளிடம் முடிவு எடுக்கும் அதிகாரத்தை அளியுங்கள். அவர்கள் தவறுகளில் இருந்து தான் நிறைய பாடத்தை கற்றுகொள்ள செய்வார்கள். இச்செயல் அவரிடம் நம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வை வளர்க்க செய்கிறது
Image Source: pexels-com
உங்க டீனேஜ் குழந்தையுடன் வலுவான நட்புறவை வளர்ப்பது அவசியமாகும். இதன் மூலம் இருவருக்கும் இடையிலான பிணைப்பு வலுவாகக்கூடும். அதற்கு உதவும் டிப்ஸ் பற்றி இங்கு பார்க்கலாம்
Image Source: istock
Thanks For Reading!