Jul 18, 2024
By: Anojஅனைத்து வீட்டு கிச்சனிலும் தவறாமல் இடம்பெறும் இஞ்சியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. அவை உடல்நல குறைபாடுகளை போக்குவதோடு பாலியல் பிரச்சனைக்கும் தீர்வாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கான காரணங்களை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
பாலியல் ஆர்வத்தை தூண்ட சீரான ரத்த ஓட்டம் அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இஞ்சியில் உள்ள gingerol போன்ற கலவைகள், ரத்த நாளங்களை விரிவுப்படுத்தி, இனப்பெருக்க உறுப்புகளுக்கு சிறந்த ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்கின்றன
Image Source: istock
நாள்பட்ட அழற்சியானது உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி பாலியல் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். பிறப்புறுக்கான ரத்த ஓட்டத்தை பாதித்து, பாலியல் துண்டுதலை குறைக்கக்கூடும். இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், இப்பிரச்சனையை சரிசெய்யக்கூடும்
Image Source: istock
உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்தால், பாலியல் ஆர்வமும் குறையக்கூடும். பிறப்புறுப்பில் வறட்சியை உண்டாக்கி உடலுறவின் போது வலியை ஏற்படுத்தக்கூடும். ஆனால், இஞ்சியில் உள்ள கலவைகள், ஹார்மோனை சமநிலைப்படுத்தி பாலியல் ஆர்வத்தை பராமரிக்கக்கூடும்
Image Source: istock
இஞ்சியில் காணப்படும் வலுவான ஆன்டி ஆக்ஸிடன்ட், ஃப்ரீ ரேடிக்கல் எதிர்த்து போராட உதவக்கூடும். அவை செல் சேதங்களை தடுப்பதோடு பாலியல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடும்
Image Source: istock
ஆரோக்கியமான செரிமான மண்டலம் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை உறுதி செய்கிறது. இதன் மூலம் ஆற்றல் அளவு மேம்படுவதோடு ஹார்மோன் ஆரோக்கியத்தையும் காக்க முடியும். இவை இரண்டும் சீராக இல்லாத பட்சத்தில், பாலியல் வாழ்க்கை தானாகவே பாதிக்கப்படக்கூடும்
Image Source: pexels-com
இஞ்சி டீ அல்லது இஞ்சி ஸ்மூத்தி ரெடி செய்து காலையில் குடித்து வர செய்யலாம். இதுதவிர, தினசரி உணவிலும் துருவிய இஞ்சியை தவறாமல் சேர்க்க வேண்டும். தினசரி 3 முதல் 4 கிராம் இஞ்சி போதுமானது ஆகும்
Image Source: pexels-com
இஞ்சி எண்ணெயை கேரியர் ஆயிலுடன் மிக்ஸ் செய்து, அடிவயிற்றில் தடவி மசாஜ் செய்யலாம். இது பெல்விக் பகுதியில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தக்கூடும். இதுதவிர, நறுமணத்தை வெளியீடும் diffuser-ல் இஞ்சி எண்ணெயை சேர்த்து படுக்கையறையில் வைக்கலாம்
Image Source: istock
2023ல் வெளியான ஆய்வின் படி, இஞ்சி அதன் பாலியல் தூண்டுதல் மேம்படுத்தும் விளைவு காரணமாக, பாலியல் ஆர்வம் குறைவாக இருக்கும் நபர்களின் பாலியல் செயல்பாட்டை மேம்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது
Image Source: istock
Thanks For Reading!