Jul 8, 2024
By: Anojஉட்புற தோட்டம் வைப்பது காற்றின் தரத்தை மேம்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கற்றாழை, பொத்தோஸ் அல்லது ஐவி போன்ற தாவரங்கள் சுவாசிக்கும் காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது. இவை காற்றில் இருந்து நச்சுக்களை வடிகட்டி உங்களுக்கு கொடுக்கும்.
Image Source: pexels-com
உட்புற தோட்டம் உங்கள் மனதுக்கு நிம்மதியை தரும். பசுமையான செடிகள் எப்பொழுதும் உங்கள் மன அழுத்தத்தை குறைக்கிறது. செடிகள் காற்றில் அசைவதையும், பூக்கள் பூப்பதை பார்க்கும் போதும் மன அழுத்தம் குறைகிறது.
Image Source: istock
வீட்டிற்குள்ளே பூக்கும் தாவரங்களை வைக்கும் போது அவற்றின் நறுமணங்கள், மல்லிகைப் பூவின் வாசம், ரோஜாப்பூவின் வாசம் உங்களுக்கு சிறந்த மனநிலையை கொடுக்கும்.
Image Source: pexels-com
உட்புற தோட்டத்தில் உங்கள் சமையலுக்கு தேவையான செடிகளையும் நீங்கள் வைக்கலாம். மூலிகை செடிகள், காய்கறிகளை வளர்ப்பது, புதினா செடி போன்றவற்றை வைப்பது உங்கள் சமையலுக்கு பயனளிக்கும்.
Image Source: pexels-com
செடிகள் என்றாலே அழகு தான். அதை வீட்டினுள் வைக்கும் போது கூடுதல் அழகை பெறுவீர்கள். பசுமையான உட்புறத் தோட்டங்கள் உங்கள் வீட்டிற்கு அழகு சேர்க்கும்.
Image Source: pexels-com
செடிகளை வளர்ப்பது என்பது உங்கள் வீட்டுக்கு மட்டுமல்ல நம் நாட்டுக்கும் நல்லது. இது சுற்றுச்சூழலை தூய்மையாக்குகிறது. இதன் மூலம் காற்று மாசுபாட்டை தவிர்க்க முடியும். வீட்டிற்குள் ஒரு நேர்மறையான சூழலை உருவாக்கும்.
Image Source: pexels-com
லாவண்டர், மல்லிகை மற்றும் கெமோமில் போன்ற தாவரங்கள் நறுமணத்தை கொடுக்கும். இதனால் சிறந்த தூக்கத்தை பெறுவீர்கள். நிதானமான மனநிலையை உங்களுக்கு கொடுக்கும்.
Image Source: pexels-com
சில உட்புற தாவரங்களுக்கு குறைந்த பராமரிப்பு போதுமானது. பாம்பு செடிகள், ஸ்பைடர் செடிகள், போத்தோஸ் ஜேட் போன்ற தாவரங்களை வளர்க்கலாம்.
Image Source: pexels-com
தோட்டக்கலையை செய்வது நீங்களும் நேரத்தை சிறந்த வழியில் செலவழிக்க முடியும். உட்புறத் தோட்டம் உங்கள் மனதிற்கு சிகிச்சை அளிக்கிறது. இதன் மூலம் மகிழ்ச்சியான மனநிலையை பெறுவீர்கள்.
Image Source: pexels-com
Thanks For Reading!