May 10, 2024
தேங்காய் எண்ணெய் சேதமடைந்த கூந்தலை சரி செய்கிறது. முடி தண்டுகளுக்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. இதன் மூலம் பளபளப்பான கூந்தலை பெற முடியும். முடி உதிர்தலை கட்டுப்படுத்த உதவுகிறது.
Image Source: istock
பாதாம் எண்ணெய் முடி தண்டுக்குள் ஆழமாக ஊடுருவி முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. பாதாம் எண்ணெய் கூந்தலுக்கு உள்ளிருந்து போஷாக்கு அளிக்கிறது. கூந்தலை ஹைட்ரேட்டிங் செய்கிறது.
Image Source: istock
கடுகு எண்ணெய் குளிர்காலத்தில் பயன்படுத்த சரியான ஒன்றாக இருக்கும். இது முடி பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. கூந்தலை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைக்க உதவுகிறது.
Image Source: istock
எள் எண்ணெய் உச்சந்தலைக்கு சிறந்த ஊட்டத்தை அளிக்க கூடியது. இது முடியை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. இந்த எள் எண்ணெயுடன் பிராமி அல்லது செம்பருத்தி சேர்த்து பயன்படுத்தி வரலாம்.
Image Source: istock
சில எண்ணெய்களை கூந்தலுக்கு பயன்படுத்தக் கூடாது. அவைகள் கூந்தலை சேதமடையச் செய்து பாதிப்புக்கு உள்ளாகிறது. முடி உதிர்தலை அதிகரிக்கிறது. கூந்தலை வறண்டு போகச் செய்யக் கூடும்.
Image Source: pexels-com
லெமன் எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்தி வந்தால் முடியின் தண்டு சுருங்கிப் போக வாய்ப்பு உள்ளது. இது முடி உதிர்தலை அதிகரிக்கிறது. முடி வறண்டு போகக் கூடும்.
Image Source: istock
ஆலிவ் எண்ணெய் முடியின் தண்டுகளுக்கு சிறந்தது என்றால் கூட இது கூந்தலை சேதப்படுத்துகிறது. கூந்தலில் க்ரீஸ் மாதிரி ஒட்டிக் கொள்ளும். இதனால் கூந்தலில் அழுக்குகள் தேங்கும்.
Image Source: istock
இதுவரை விளக்கெண்ணெய் கூந்தலுக்கு சிறந்தது என்றே கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் விளக்கெண்ணெய் கூந்தலை சேதமடையச் செய்கிறது. விளக்கெண்ணெய் கடுமையான கூந்தல் உதிர்தலை உண்டாக்கும்.
Image Source: istock
கற்பூர எண்ணெய் முடி வளர்ச்சியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகித்தாலும் இது முகப்பருக்கள், தடிப்புகள் மற்றும் பூஞ்சை தொற்றுகளுக்கு வழி வகுக்கும்.
Image Source: istock
Thanks For Reading!