[ad_1] உடலின் நச்சுக்களை வெளியேற்றும் டிடாக்ஸ் வாட்டர் ரெசிபிக்கள்

Aug 1, 2024

BY: Nivetha

உடலின் நச்சுக்களை வெளியேற்றும் டிடாக்ஸ் வாட்டர் ரெசிபிக்கள்

உடல்நல கோளாறு

மாறிவரும் வாழ்க்கை முறை, தூக்கத்தின் சுழற்சி மாறுபடுவது, உணவு முறைகளில் மாற்றம், ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது, சரியான உடற்பயிற்சிகள் மேற்கொள்ளாமை போன்ற காரணங்களால் உடலில் பல்வேறு கோளாறுகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவது அவசியமாகிறது.

Image Source: istock

டிடாக்ஸ் வாட்டர்

நமது உடலில் இருக்கும் நச்சுக்கள் இயற்கையாகவே சிறுநீர், கல்லீரல் ஆகியவற்றின் செயல்பாடுகளால் வெளியேற்றப்படும். இருப்பினும், மாசு, சுகாதாரமின்மை, பூச்சிக்கொல்லிகள் உட்கொள்ளல் போன்ற காரணங்களால் உடலின் திசுக்கள், உயிரணுக்கள் உள்ளிட்ட பகுதிகளில் நச்சுக்கள் சேமிக்கப்படுகிறது. இதனை வெளியேற்ற உதவுவது தான் இந்த டிடாக்ஸ் வாட்டர்.

Image Source: istock

எலுமிச்சை, புதினா-தேங்காய் தண்ணீர்

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் தேங்காய் துண்டு போட்டு நன்கு கலக்குங்கள். அந்த நீரில் மேலும் தேங்காய் துண்டுகளை பொடியாக நறுக்கி அதில் போடுங்கள், இந்த தேங்காய் தண்ணீரில் தேன், எலுமிச்சைச்சாறு, புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கினால் ரெடி. இது ஓர் புத்துணர்ச்சியூட்டும் பானமாகும்.

Image Source: istock

வெள்ளரி-கிவி ஜூஸ்

வெள்ளரி மற்றும் கிவி பழத்தின் தோல்களை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி அதனை ப்ரிட்ஜில் ஒருமணி நேரம் வைத்து எடுங்கள். பின்னர் அதனை பிளண்டரை எடுத்து அதில் பழங்கள், ஐஸ்கட்டிகள், தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடத்திற்கு நன்கு அடித்து கொள்ளுங்கள். பாட்டிலில் மாற்றி குடியுங்கள், உடலுக்கு நல்லது.

Image Source: istock

புதினா ஃபிஸ்

தண்ணீரில் எலுமிச்சைச்சாறு, சர்க்கரை சேர்த்து கலக்கி அதில் தேவையான அளவு ஐஸ்கட்டிகள், புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கி சோடா ஊற்றி பரிமாறலாம். இந்த ஃபிஸ் குடிப்பதால் உடல் புத்துணர்ச்சியடைவதோடு, நச்சுக்களையும் வெளியேற்றும்.

Image Source: istock

ஹால்டி டிடாக்ஸ்

ஒரு கிளாஸ் நீரை கொதிக்க வைத்து அதில் மஞ்சள், இஞ்சி, கருப்பு மிளகு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி அதில் தேன் சேர்த்து கொள்ளுங்கள். இந்த டிடாக்ஸ் குடிப்பதன் மூலம் உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேறும். மஞ்சள் என்பது ஒரு சக்தி மிகுந்த சுத்திகரிப்பு பொருளாக கருதப்படுகிறது.

Image Source: istock

இஞ்சி, இளஞ்சிவப்பு உப்பு நீர்

துருவிய இஞ்சி போட்டு ஒரு கிளாஸ் தண்ணீரை நன்கு கொதிக்க விடுங்கள். பிறகு அதனை வடிகட்டி, வெதுவெதுப்பான சூடு வந்த பிறகு அதில் ஒரு சிட்டிகை இளஞ்சிவப்பு உப்பு, இஞ்சித்துண்டு, 1 டீஸ்பூன் தேன், சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கினால் டிடாக்ஸ் ரெடி. இது நச்சுக்களை வெளியேற்றுவதோடு மனநிலையையும் அமைதியாக வைக்கிறது.

Image Source: istock

ஆரஞ்சு கேரட் டிடாக்ஸ் வாட்டர்

ஆரஞ்சையும், கேரட்டையும் தனித்தனியாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை பிளண்டரில் போட்டு இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்த்து ஒன்றாக நன்கு அடித்து கொள்ளுங்கள். இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து குடியுங்கள். இது விரைவாக நச்சுக்களை வெளியேற்றுவதோடு ஆற்றலை தக்கவைக்கவும் பயன்படுகிறது.

Image Source: istock

நீரேற்றம்

இந்த டிடாக்ஸ் வாட்டர் ரெசிபிக்கள் உங்களது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதோடு, நச்சுத்தன்மையை எதிர்த்து போராடவும், உங்கள் உடல் இழந்த நீர்ச்சத்தினை மீட்டெடுக்கவும் உதவுகிறது. மேலும் இது முழு உடல் பகுதிகளையும் சுத்தமாக்கி புத்துணர்ச்சியடைய செய்கிறது.

Image Source: pexels

Thanks For Reading!

Next: ஆரோக்கியம் நிறைந்த 'தாமரை விதை மாம்பழ பர்பி' செய்முறை

[ad_2]