Jun 14, 2024
ஜாதிக்காய் எண்ணெய் நறுமணம் மற்றும் புத்துணர்ச்சியை அளிப்பதோடு உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை தரக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது. அதனால், உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இங்கு பார்க்கலாம்
Image Source: pexels-com
ஜாதிக்காய் எண்ணெய் நரம்புகளை அமைதிப்படுத்தவும், தூக்கத்தை தூண்டும் செரோடோனின் ஹார்மோன் வெளியீட்டை அதிகரிக்கவும் உதவுகிறது. இது ஆழமான தூக்கத்தை பெற வழிவகுக்கிறது
Image Source: istock
ஜாதிக்காய் எண்ணெயில் கால்சியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளது. அவை ரத்த ஓட்டத்தை சீராக்கி அனைத்து செல்களுக்கு ஆக்சிஜன் விநியோகம் செல்வதை உறுதி செய்கிறது
Image Source: istock
ஜாதிக்காய் எண்ணெயின் அழற்சி எதிர்ப்பு பண்புகள், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கி மலச்சிக்கல், வயிறு உப்புசம், அசிடிட்டி, வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று அசெளகரியங்கள் ஏற்படாமல் தடுக்கக்கூடும்
Image Source: istock
இந்த எண்ணெய்க்கு மன அழுத்தத்தை போக்கக்கூடிய பண்புகள் உள்ளது. பதட்டம் மற்றும் மனக்கவலைகளை போக்கி மிகவும் நிம்மதியாக உணர வைக்கும்.
Image Source: pexels-com
ஜாதிக்காய் எண்ணெயில் வலுவான ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல் சேதங்களை தடுத்து, இதய நோய், புற்று நோய் போன்ற நாள்பட்ட நோய் அபாயங்களை குறைக்க பயன்படுகிறது
Image Source: pexels-com
மூளைக்கு சிறந்த மருந்தாக ஜாதிக்காய் எண்ணெய் திகழ்கிறது. மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும், கவனிக்கும் திறனை மேம்படுத்தவும் பயன்படுகிறது. இதிலுள்ள myristicin எனும் இயற்கை கலவைகள், மூளையை கூர்மையாக வைத்திருக்க செய்கிறது
Image Source: istock
இந்த எண்ணெய் இயற்கையான வலி நிவாரணியாக செயல்படுகிறது. மாதவிடாய் தசைப்பிடிப்பை சரிசெய்வதோடு ஹார்மோன் சமநிலையின்மை, மூட் ஸ்விங்ஸ் போன்ற பிரச்சனைகளையும் கட்டுப்படுத்தக்கூடும்
Image Source: istock
நறுமணத்தை வெளியிடும் டிஃப்பியூசரில் 5 முதல் 7 சொட்டுகள் ஜாதிக்காய் எண்ணெய் சேர்க்க செய்யலாம். அதேநேரம், வயிறு மற்றும் மாதவிடாய் பிரச்சனைக்கு இந்த எண்ணெயை அடிவயிற்றில் தடவி மசாஜ் செய்தால் நல்ல பலனை காணலாம்
Image Source: pexels-com
Thanks For Reading!