Aug 19, 2024
உடலில் மெட்டபாலிசம் அதிகமாக இருந்தால், கலோரி எரிக்கும் பிராசஸூம் வேகமாக இருக்கக்கூடும். மெட்டபாலிசம் விகிதத்தில் மரபணு மட்டுமின்றி சில வாழ்க்கை முறை பழக்கங்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. அதனை பற்றி இங்கு பார்க்கலாம்
Image Source: pexels-com
அதிக மெட்டபாலிசம் இருப்பவர்கள், தினசரி உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை கட்டாயம் கொண்டிருப்பார்கள். குறிப்பாக, கார்டியோ, ஸ்ட்ரென்த் ட்ரெய்னிங்கில் ஈடுபடுவார்கள். உடற்பயிற்சி தசை வலிமையை வலுவடைய செய்து, மெட்டபாலிசம் விகிதத்தை அதிகரிக்க பயன்படுகிறது
Image Source: pexels-com
புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புகள், கார்ப்ஸ் சத்து அடங்கிய சமச்சீர் உணவுகளை, 3 அல்லது 4 மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிடுபவர்களுக்கு, மெட்டபாலிசம் அதிகமாக இருக்கக்கூடும். இது நாள் முழுவதும் மெட்டபாலிசம் விகிதம் குறையாமல் பார்த்துகொள்ளுக்கூடும்
Image Source: istock
உடலில் மெட்டபாலிசம் அதிகமாக இருப்பதற்கு, நீரேற்றம் கூட முக்கிய காரணமாகும். தினமும் போதுமான அளவு நீர் குடிப்பது, மெட்டபாலிசத்தை ஊக்குவித்து கலோரி எரிக்கும் அளவை அதிகரிக்க செய்கிறது
Image Source: istock
ஹை மெட்டபாலிசம் இருப்பவர்கள், குறைந்தது 8 முதல் 9 மணி நேரம் தூங்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். உடலுக்கு ஓய்வு அளிப்பது மெட்டபாலிசத்தை பராமரிக்க உதவக்கூடும். அதேநேரம், தூக்கமின்மை ஹார்மோன் சமநிலையை பாதித்து மெட்டபாலிசத்தை மெதுவாக செய்திடும்
Image Source: istock
மன அழுத்தத்தை திறம்பட நிர்வகிப்பது கூட, மெட்டபாலிசத்தில் தாக்கத்தை உண்டாகும். தியானம், யோகா அல்லது மூச்சுப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் மெட்டபாலிசம் அளவு அதிகமாகவே இருக்கக்கூடும்
Image Source: istock
அதிக மெட்டபாலிசம் இருப்பவர்களின் பொதுவான பழக்கவழக்கங்களில் ஒன்றாக கிரீன் டீ உள்ளது. அதில் கலவைகள், மெட்டபாலிசத்தை தூண்டி அதிகமாக இருப்பதற்கு வழிவகுக்கிறது
Image Source: istock
உணவை சாப்பிடாமல் தவிர்ப்பது, மெட்டபாலிசத்தை குறைக்க செய்யலாம். தினமும் சரியான நேரத்தில் உணவை தவறாமல் சாப்பிடுபவர்களுக்கு, மெட்டபாலிசம் விகிதம் சீராக இருக்கக்கூடும்
Image Source: istock
நாள் முழுவதும் உடல் அசைவை கொண்டிருப்பது, அதிக மெட்டபாலிசம் இருப்பவர்களின் முக்கியமான பழக்கமாகும். நீண்ட நேரம் அமர்வதற்கு பதிலாக படிகட்டு ஏறுதல், வாக்கிங் போன்ற செயலில் அவ்வப்போது ஈடுபடுவது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்
Image Source: istock
Thanks For Reading!