[ad_1] ​உடலுக்கு 'வைட்டமின் கே' அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்​

Apr 30, 2024

​உடலுக்கு 'வைட்டமின் கே' அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்​

Anoj

வைட்டமின் கே

ரத்த உறைதல், எலும்பு ஆரோக்கியம், இதய நோய் ஏற்படுவதை தடுப்பது என உடல் ஆரோக்கியத்தில் வைட்டமின் கே முக்கிய பங்கை கொண்டுள்ளது. அதைப் பற்றி இங்கு பதிவில் விரிவாக பார்க்கலாம்

Image Source: istock

வலிமையான எலும்புகள்

எலும்பு ஆரோக்கியத்தில் வைட்டமின் கே கணிசமான பங்கை கொண்டுள்ளது. எலும்பு அமைப்பை வலுப்படுத்துவது மட்டுமின்றி புதிய எலும்பு திசுக்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இதுதவிர, எலும்பு அடர்த்தியை அதிகரித்து எலும்பு முறிவு அபாயத்தை குறைக்கிறது

Image Source: istock

இதய ஆரோக்கியம்

வைட்டமின் கே, தமனிகளில் கால்சியம் படிவதை தவிர்த்திட உதவும் Matrix GLA என்கிற புரோட்டீன் ஆக்டிவேட் செய்ய உதவுகிறது. மேலும், இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை பராமரித்து, இதயத்தில் அழுத்தம் ஏறபடுவதை குறைக்க உதவுகிறது

Image Source: istock

அறிவாற்றல் திறன்

வைட்டமின் கே சத்தில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவை, மூளையை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கம் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கக்கூடும். இதன் மூலம், மறதி ஏற்படும் அபாயம் முற்றிலும் குறைய செய்கிறது

Image Source: istock

ரத்த உறைதல்

ரத்தம் உறைதல் என்பது ரத்த நாளங்கள் காயமடையும் போது அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதைத் தடுக்க உதவும் பிராசஸாகும். வைட்டமின் கே-ல் ரத்தத்தை உறைய வைக்கும் புரோட்டீன்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன

Image Source: istock

சரும ஆரோக்கியம்

வைட்டமின் கே, சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்தாகும். கருவளையம் நீங்க, தழும்புகள் மறைய மற்றும் வயதான தோற்றத்தை தடுத்திட பெரிதும் உதவியாக இருக்கிறது

Image Source: istock

ரத்த சர்க்கரை அளவு

வைட்டமின் கே, உடலில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகிறது. அதாவது, ரத்த சர்க்கரை அளவை குறைத்திட, உடலின் இன்சுலின் திறம்பட பயன்படுத்தக்கூடும். இதன் மூலம், டைப் 2 நீரிழிவு அபாயமும் குறைய செய்கிறது

Image Source: istock

வைட்டமின் கே உணவுகள்

கீரை, ப்ரோக்கோலி, காலிஃபிளவர், சோயா பீன்ஸ், ப்ளூபெர்ரி, முட்டை, கிவி, நட்ஸ் மற்றும் விதைகள், மீன், சிக்கன், முட்டை மஞ்சள் கரு ஆகியவை வைட்டமின் கே சத்தின் சிறந்த ஆதாரங்கள் ஆகும்

Image Source: pexels-com

பாதுகாப்பான நுகர்வு என்ன?

தினசரி வைட்டமின் கே நுகர்வு ஆண்களுக்கு 120 மி.கிராமும், பெண்களுக்கு 90 மி.கிராமும் ஆகும். காயங்களில் அதிக ரத்தப்போக்கு, ஈறுகளில் ரத்தம், மலத்தில் ரத்த வருதல், அடிக்கடி காயம் ஏற்படுவது ஆகியவை வைட்டமின் கே குறைபாட்டின் அறிகுறிகள் ஆகும்

Image Source: istock

Thanks For Reading!

Next: அலுவலக பணி செய்யும் நபர்களின் உடல் எடை திடீரென அதிகரிப்பது ஏன்?

[ad_2]