May 13, 2024
By: Anojஇருவருக்கும் ஆர்வம் இருந்தால் மட்டுமே, உடலுறவில் முழுமையான திருப்தி கிடைக்கக்கூடும். ஆனால், சில காரணிகளால் பெண்களுக்கு உடலுறவு மீதான நாட்டம் குறையலாம் என ஆய்வுகள் கூறுகிறது. அந்த காரணங்களை இங்கு விரிவாக காணலாம்
Image Source: freepik-com
உடலுறவில் திருப்தி அடைவதில் சிக்கல் அல்லது வலிமிகுந்த உடலுறவில் ஈடுபடுவது போன்ற செயல்கள், அதன் மீதான ஆசையை பெண்களிடையே குறைக்க செய்யலாம்.
Image Source: istock
உங்களுக்கு கீல்வாதம், நீரிழிவு, புற்றுநோய் அல்லது நரம்பியல் நோய்கள் போன்ற உடல் கோளாறுகள் இருக்கும் பட்சத்தில், அவை பாலியல் ஆர்வத்தை பாதிக்க செய்யலாம்
Image Source: istock
குழந்தைகளை கவனிப்பது, வயதான பெற்றோரை பார்த்துகொள்வது, வேலைக்கு செல்வது என பிஸியான வாழ்க்கை முறையை கொண்டிருந்தால் பாலியல் ஆர்வம் குறைவது இயல்பாகும். இவை உடலை சோர்வாக்கி உடலுறவில் ஈடுபடும் ஆசையை முற்றிலும் மாற்றக்கூடும்
Image Source: pexels-com
ஹார்மோன் மாற்றங்கள், உடலுறவில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தலாம். இவை பிறப்புறுப்பு திசைகளை மெல்லியதாகவும் உலர்ந்ததாகவும் மாற்றி உடலுறவை வலிமிகுந்த ஒன்றாக மாற்ற செய்கிறது. அதேபோல், மாதவிடாய் நிறுத்தமும் உடலுறவில் ஆர்வத்தை இழக்க செய்யலாம்
Image Source: istock
நீங்கள் கர்ப்பம் தரிக்கும் போதும், தாய்ப்பால் கொடுக்கும் போதும், உடலில் ஹார்மோன் மாற்றங்கள் எதிர்கொள்வீர்கள். உடல் தோற்றம் மாற்றம், சோர்வு மற்றும் குழந்தை கவனிக்கும் பிராசஸால் பாலியல் ஆர்வம் குறைய செய்யலாம்
Image Source: istock
பாலியல் ஆர்வம் இல்லாமல் போனதற்கு, உளவியல் பிரச்சனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மனக்கவலை, மன அழுத்தம், மோசமான பாலியல் அனுபவங்கள், கடந்தகால பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவை உடலுறவின் மீதான விருப்பத்தை குறைக்க செய்யலாம்
Image Source: istock
சில நேரங்களில், உங்க துணையுடன் நிகழும் வாக்குவாதம், சண்டைகள் கூட பாலியல் செயல்பாட்டை பாதிக்க செய்யலாம். பிரச்சனைக்கு தீர்வு காணாமல், உடல் ரீதியான நெருக்கத்தை எதிர்பார்ப்பது தவறாகும். இப்பிரச்சனை சமாளிக்க நல்ல தகவல் தொடர்பு அவசியம்
Image Source: istock
உடலுறவில் நாட்டம் குறைவது திருமண உறவில் விரிசலை உண்டாக்க செய்யலாம். இதனை சமாளிக்க கப்புள் தெரபி, தியானம், ஆல்கஹால் நுகர்வை குறைப்பது மற்றும் மருந்து பயன்பாட்டில் கவனம் செலுத்துவது ஆகியவை, பாலியல் ஆர்வம் அதிகரிக்க நிச்சயம் உதவக்கூடும்
Image Source: pexels-com
Thanks For Reading!