Jun 1, 2024
தேயிலை செடிகளின் இலை மற்றும் மொட்டுக்கள் விரியும் முன்னர் பறிக்கப்படுவது தான் வெள்ளை தேயிலை. இந்த பூவின் மீது வெள்ளை நிற முடிகள் காணப்படுவதால் இது வெள்ளை தேயிலை என்று கூறப்படுகிறது.
Image Source: unsplash-com
மிக குறைவான அளவில் பதப்படுத்தப்படும் இந்த வெள்ளை தேயிலையில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதிலுள்ள ஆன்டி-ஆக்சிடென்டுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை அழிக்க உதவுகிறது.
Image Source: pexels-com
உடல் எடையினை குறைக்க விரும்புவோர் இந்த வெள்ளை தேநீரை தினமும் அருந்தினால் அதிகளவு பசி ஏற்படாமல் உடல் எடை குறைய துவங்கும்.
Image Source: unsplash-com
இந்த வெள்ளை தேநீரில் முதுமையினை எதிர்க்கும் பண்புகள் அதிகம். இந்த தேநீரை குடித்தால் சருமத்தில் ஏற்படும் கோடுகள், சுருக்கங்கள் மறைந்து இளமையான சருமத்தினை பெறலாம்.
Image Source: pexels-com
ஒயிட் டீ என்னும் இந்த வெள்ளை தேநீரை குடிப்பதால் இனிப்பு மீதான நாட்டம் குறைந்து உடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும். மேலும் மலச்சிக்கல், ஒவ்வாமை உள்ளிட்டவை ஏற்படாமல் செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாகிறது.
Image Source: istock
ஒயிட் டீயில் பாலிபான்கள் நிறைந்துள்ள காரணத்தினால் ஞாபக சக்தியினை அதிகரிக்க செய்யும். நோய் எதிர்ப்பு சக்தியினையும் அதிகரித்து தொற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கும் என்று கூறுகிறார்கள்.
Image Source: pexels-com
இந்த ஒயிட் டீ ரத்தத்தில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து செரிமான அமைப்பிற்கும், இருதயத்திற்கும் ஆரோக்கியம் அளிக்கக்கூடியது. மேலும் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
Image Source: unsplash-com
வெள்ளை தேநீரில் உள்ள மூலக்கூறுகள் சர்க்கரை மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி பற்களை வலுப்படுத்துவதோடு, பற்கள் சிதைவுறுவதையும் தடுக்கிறது.
Image Source: unsplash-com
இந்த தேநீரை கொதிக்கும் நீர் கொண்டு தயாரிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அது இதன் மென்மையான சுவையினை மாற்ற வாய்ப்புண்டு. இந்த தேநீரை குடித்தால் அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியினை அளிக்கிறது.
Image Source: unsplash-com
Thanks For Reading!