Jul 30, 2024
நல்லெண்ணெய் அக்காலம் முதலே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறி அனைத்து சமையல்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான அனைத்து ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது. எள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் ஆரோக்கியத்தின் அமுதம் என்று கூறுகிறார்கள்.
Image Source: istock
நல்லெண்ணெய்யில் சீசேம் என்னும் பொருள் உள்ளது, அதனை உட்கொள்ளும் பட்சத்தில் இதயத்திற்கு ஆரோக்கியமளிக்கிறது. மேலும் வாதம், கபம், பித்தம் போன்ற தொந்தரவுகளையும் தீர்க்கவும் இது உதவுகிறது, உடலுக்கு ஆற்றலுடன் செயல்படும் திறனையும் கொடுக்கிறது.
Image Source: istock
இந்த எண்ணெய்யில் மெக்னீசியம் சத்து அதிகளவு அமைந்துள்ளது. இது உடலில் இன்சுலின் சுரப்பினை குறைக்கிறது, நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கவும் செய்கிறது. இந்த எண்ணெய்யை சிறிதளவு குடித்தால் உடலிலுள்ள உஷ்ணம் குறையும்.
Image Source: istock
இந்த எண்ணெய்யில் லெசித்தின் மற்றும் லினோலிக் என்னும் அமிலம் உள்ளது. இது நமது உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி வெளியேற்றுவதோடு நல்ல கொழுப்பினை அதிகரிக்க செய்கிறது. இந்த எண்ணெய்யை அளவாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் உடல் எடை கூடும் அபாயமும் ஏற்படாது.
Image Source: istock
நல்லெண்ணைய்யை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரையின் தாக்கம் குறைய துவங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இது எலும்புகளுக்கு வலு மற்றும் ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
Image Source: istock
முட்டையில் இருக்கும் அளவிலான ப்ரோட்டீன் இந்த எண்ணெய்யில் உள்ளது, தினசரி உணவில் இதனை நாம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் இயக்கம், செரிமான பிரச்சனைகள் உள்ளிட்ட அனைத்தும் சீராகும். வயதான காலத்தில் ஏற்படும் மூட்டு வலி பிரச்சனையும் வராமல் தடுக்கப்படும்.
Image Source: istock
நல்லெண்ணெய்யை மூலநோய் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் அதிகளவில் எடுத்து கொள்ள கூடாதாம். அளவுக்கு மீறினால் இது அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Image Source: istock
நல்லெண்ணெய்யில் இருக்கும் கொழுப்புகள் கல்லீரலில் படிய துவங்கும் என்பதால் ஃபேட்டி லிவர் பிரச்சனை உள்ளவர்கள் இந்த எண்ணெய் பயன்பாட்டினை தவிர்ப்பது நல்லது. மேலும் பாதத்தில் தினமும் தூங்க செல்வதற்கு முன் இந்த எண்ணெய்யை தடவிக்கொண்டு படுத்தால் பாத வெடிப்புகள் குணமாகும்.
Image Source: istock
இந்த முறை பெரும்பாலானோருக்கு தெரியும், தினமும் காலையில் வாயில் நல்லெண்ணெய்யை ஊற்றி கொண்டு நன்கு வாயை கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதால் பற்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும், ஈறு பிரச்சனைகள், வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
Image Source: Samayam Tamil
Thanks For Reading!