[ad_1] உடல் எடையை குறைக்க ‘ஒமேகா - 3’ உதவுமா?

Jul 1, 2024

உடல் எடையை குறைக்க ‘ஒமேகா - 3’ உதவுமா?

mukesh M

எடையை குறைக்க ஒமேகா - 3 கொழுப்பு அமிலம்?

ஒமேகா-3 எனப்படுவது மனித ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அவசியமான கொழுப்பு அமிலங்களின் குழு ஆகும். இந்நிலையில் இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் நுகர்வு உடல் எடை குறைப்பில் உதவுமா? உதவாதா? என இங்கு காணலாம்!

Image Source: pexels-com

நிபுணர்கள் கூறுவது என்ன?

பசியை கட்டுக்குள் வைப்பது, வளர்சிதை மாற்றத்தை உறுதி செய்வது என பல்வேறு வகைகளில் இந்த ஒமேகா - கொழுப்பு அமிலம் உதவுகிறது. அந்த வகையில் இதன் முறையான நுகர்வு ஆரோக்கிய உடல் எடை பராமரிப்பில் உதவி செய்கிறது.

Image Source: istock

எப்படி உதவுகிறது?

ஒமேகா - 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளின் நுகர்வு ஆனது வயிற்றின் முழுமையை உறுதி செய்து எடுத்துக்கொள்ளும் உணவின் அளவை குறைக்கிறது. அந்த வகையில் உடல் எடை அதிகரிப்பதை இது தடுக்கிறது.

Image Source: istock

கூடுதல் கொழுப்பை குறைக்கும்!

ஆய்வுகளின் படி இந்த ஒமேகா - 3 கொழுப்பு அமிலத்தின் நுகர்வு ஆனது உடலில் உள்ள (குறிப்பாக இடுப்பு பகுதியில் உள்ள) கூடுதல் கொழுப்பை கரைக்க உதவுகிறது. அந்த வகையில் இது உடல் பருமன் வாய்ப்பை தடுக்கிறது.

Image Source: istock

சீரான வளர்சிதை மாற்றத்தை உறுதி செய்கிறது!

30 வயது கடந்த நபர்கள் எதிர்கொள்ளும் மிகமுக்கியமான பிரச்சனைகளில் ஒன்று வளர்சிதை மாற்ற பிரச்சனைகள. ஆரோக்கிய உடல் எடை பராமரிப்புக்கு சீரான வளர்சிதை மாற்றம் அவசியமாக இருக்கும் நிலையில், ஒமேகா - 3 கொழுப்பு மில் இதனை உறுதி செய்கிறது!

Image Source: istock

உடற்பயிற்சின் பலனை அதிகரிக்கும்!

இயல்பான உடற்பயிற்சியை காட்டிலும், ஒமேகா - 3 நுகர்வுக்கு பின் செய்யும் உடற்பயிற்சியின் போது கூடுதல் கலோரிகள் எரிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், உடற்பயிற்சியின் பலனை அதிகரித்து, ஆரோக்கிய உடல் எடை பராமரிப்புக்கு உதவுகிறது.

Image Source: istock

சரி, எப்படி உட்கொள்வது?

உடல் ஆரோக்கியத்திற்கு போதுமான ஒமேகா - 3 கொழுப்பு அமிலத்தை நாம் இயற்கை வழியில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் வழியே எடுத்துக்கொள்ளலாம். மேலும், மருத்துவர் பரிந்துரையின் படி கேப்சூல் வடிவிலும் எடுத்துக்கொள்ளலாம்!

Image Source: istock

எவ்வளவு உட்கொள்வது?

FDA கருத்துப்படி நாள் ஒன்றுக்கு 3,000mg அளவு கொழுப்பு அமிலங்கள் போதுமானது என கூறப்படுகிறது. அதேநேரம், இந்த அளவு ஆனது கொழுப்பு அமிலத்தின் வடிவம், தன்மை பொறுத்து மாறுபடலாம் எனவும் FDA எச்சரிக்கிறது!

Image Source: istock

அளவுக்கு மிகுதியானால்?

ஒமேகா - 3 கொழுப்பு அமிலத்தின் அதிகப்படியான நுகர்வு ஒரு சிலருக்கு இரத்தப்போக்கினை ஏற்படுத்த கூடும். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் பெண்களின் இரத்தப்போக்கு அதிகரிக்க கூடும். அதேநேரம், ஒவ்வாமை பிரச்சனைகளுக்கும் வழிவகுக்க கூடும்!

Image Source: istock

Thanks For Reading!

Next: மது அருந்துவதால் ஏற்படும் குறுகிய கால விளைவுகள் என்ன?

[ad_2]