Jun 8, 2024
உடல் எடையை கட்டுக்குள் வைத்திட எலுமிச்சை தண்ணீர் சிறந்த தேர்வாகும். அதனை தினசரி உணவு முறையில் சேர்க்கும் முன், நீங்கள் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: pexels-com
இது எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து தயாரிக்கப்படும் எளிய பானமாகும். இதை சூடாக அல்லது ஜில்லாக குடிக்க செய்யலாம். இந்த பானம் ஆற்றல் அதிகரிப்பு மற்றும் சீரான செரிமானத்திற்கு வழிவகுக்கும்
Image Source: istock
எலுமிச்சை தண்ணீர் கலோரி குறைவான பானமாகும். அரை எலுமிச்சை பழ சாற்றில், 6 கலோரிகள் மட்டுமே இருக்கக்கூடும். உடல் எடையை குறைக்க கலோரி நுகர்வை கட்டுப்படுத்துவது அவசியமாகும்
Image Source: pexels-com
சிலர் எலுமிச்சை தண்ணீரின் சுவையை அதிகரிக்க, உப்பு அல்லது சர்க்கரையை சேர்க்க செய்வார்கள். இவை கலோரி அளவை அதிகரித்து, ஆரோக்கியமற்ற பானமாக மாற்றுகிறது
Image Source: istock
நீங்கள் எலுமிச்சை நீரின் சுவையை மேம்படுத்த விரும்பினால், தேன், இஞ்சி துண்டு மற்றும் புதினா இலையை சேர்க்க செய்யலாம். இந்த பானம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நீரேற்றத்தை பராமரிக்க உதவும்
Image Source: istock
ஆரோக்கியமான பானம் என்பதற்காக நாள் முழுவதும் குடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை குடித்தால் போதுமானது ஆகும்
Image Source: istock
எப்போதும் சுத்திகரிப்பு செய்யப்பட்ட தண்ணீரை மட்டும் எலுமிச்சை நீர் பானத்திற்கு பயன்படுத்த வேண்டும். ஏனெனில், சுத்திகரிப்பு செய்யாத நீரில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் இருக்க செய்யலாம்
Image Source: pexels-com
எலுமிச்சை சாற்றை நேரடியாக உட்கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவை பற்களின் மேற்பரப்பை பாதிக்க செய்யலாம். எப்போதும் எலுமிச்சை சாற்றை தண்ணீரில் மிக்ஸ் செய்து அருந்துங்கள்.
Image Source: pexels-com
காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரை குடிக்க செய்யுங்கள். இது மெட்டபாலிசத்தை ஊக்குவிப்பதால், உடல் எடை சட்டென குறையக்கூடும். அதற்காக அளவுக்கு அதிகமாக குடிப்பது குடல் செயல்பாட்டை பாதிக்க செய்யலாம்!
Image Source: pexels-com
Thanks For Reading!