Jul 11, 2024
உடல் பருமன் (Obesity), அதிக எடை (Overweight) என இரண்டும் இக்கால இளைஞர்களின் பிரதான பிரச்சனையாக இருக்கும் நிலையில், இவை இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
உடல் பருமன் எனப்படுவது உடலில் தேங்கும் தேவையற்ற / கூடுதல் கொழுப்பு காரணமாக உடல் பெருத்து காணப்படும் ஒரு நிலை ஆகும். இந்த அசாதாரண கொழுப்பு திரட்சி பல்வேறு ஆரோக்கிய சிக்கலுக்கு வழிவகுக்கிறது!
Image Source: istock
அதிக எடை (அ) எடை அதிகரிப்பு என்பது உங்கள் வயது மற்றும் உயரத்திற்கு பொருத்தமான வரம்பை (BMI அளவை) மீறும் ஒரு எடை ஆகும். இதில் கொழுப்பின் தாக்கம் அதிகம் இருப்பதில்லை!
Image Source: pexels-com
உடல் பருமன், அதிக எடை என இரண்டும் உடலில் உள்ள கொழுப்பு செல்களின் அளவை அதிகரித்து, உடலில் அளவை மிகைப்படுத்தி காண்பிக்கிறது. பெரும்பாலும், ஒருமித்த காரணங்களை இவை இரண்டும் பகிர்ந்துக்கொள்கிறது!
Image Source: istock
தூக்கமின்மை, மருந்துகளின் பக்க விளைவு, உணவு வழக்கம், உடல் இயக்கம் மட்டுப்படுதல் போன்றவை இந்த உடல் பருமன் மற்றும் எடை அதிகரிப்பு ஆகிய இரண்டின் பொதுவான (முக்கியமான) காரணங்களாக அமைகின்றன.
Image Source: istock
நிபுணர்கள் கூற்றுப்படி உடல் பருமன், எடை அதிகரிப்பு என இரண்டும் நிகரான ஆபத்து காரணிகளை கொண்டுள்ளது. இருப்பினும் எடை அதிகரிப்பை காட்டிலும் - உடல் பருமன் அதிக ஆபத்தை உண்டாக்கும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
Image Source: istock
உடலில் கொழுப்பின் அளவு அதிகரிப்பதால் உண்டாகும் உடல் பருமன், இரத்த நாளங்களை அடைத்து மாரடைப்பு மற்றும் மாரடைப்புடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது!
Image Source: istock
இதேப்போன்று இந்த உடல் பருமன் பிரச்சனை ஆனது இதய ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் நீரிழிவு பிரச்சனைக்கும் வழிவகுக்க கூடும் என நிபுணர்கள் எச்சரிகின்றனர்!
Image Source: istock
உடல் பருமன், அதிகரிக்கும் உடல் எடை என இரண்டையும் கட்டுக்குள் வைக்க ஆரோக்கிய உணவு வழக்கம், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்துவது நல்லது!
Image Source: istock
Thanks For Reading!