Aug 6, 2024
உடலில் எந்த பாகங்களில் வலி எடுத்தாலும், அது மனதையும் உடலையும் சோர்வாக்கி பிற வேலைகளில் திறம்பட செயல்பட முடியாத நிலையை உண்டாக்கும். அத்தகைய வலியை சட்டென போக்கக்கூடிய ஆயுர்வேத எண்ணெயை தயாரிக்கும் முறையை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
இந்த எண்ணெயை தயாரிக்க 2 கப் கடுகு எண்ணெய், அரை இன்ச் இஞ்சி, 3 அல்லது 4 கிராம்பு மற்றும் 1 வெங்காயம் தேவைப்படக்கூடும்
Image Source: istock
முதலில் கடாயை அடுப்பில் வைத்து, 2 கப் கடுகு எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் மிதமான நெருப்பில் வைத்திருக்க வேண்டும்
Image Source: pexels-com
ஒரு மீடியம் சைஸ் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதனை எண்ணெயுடன் சேர்த்து அடுப்பில் வைத்திருக்க வேண்டும்
Image Source: istock
இப்போது இஞ்சியை நன்றாக துருவிக்கொள்ள வேண்டும். 2 டீஸ்பூன் இஞ்சியை கலவையில் சேர்க்க வேண்டும்
Image Source: istock
அடுத்து, 3 அல்லது 4 கிராம்பை சேர்த்து சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும்
Image Source: istock
சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்கு பிறகு, அடுப்பை அணைத்துவிடலாம். கலவை நன்றாக ஆறியதும் காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து பாதுகாக்க செய்யலாம்
Image Source: pexels-com
இந்த எண்ணெயை வலி இருக்கும் மூட்டு போன்ற பகுதிகளில் தடவி, சுமார் 5 முதல் 6 நிமிடங்கள் வட்ட வடிவில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்
Image Source: istock
கிராம்பு, வெங்காயம் சேர்க்கப்பட்ட கடுகு எண்ணெயை, உடல் வலியை போக்கிட திறம்பட உதவக்கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த எண்ணெயை பயன்படுத்தும் முன்பு, உங்களது சுகாதார நிபுணரிடமும் ஆலோசித்து கொள்ளுங்கள்
Image Source: istock
Thanks For Reading!