[ad_1] உடுப்பி ஸ்பெஷல் இன்ஸ்டன்ட் தக்காளி தோசை செய்முறை!

Jun 8, 2024

உடுப்பி ஸ்பெஷல் இன்ஸ்டன்ட் தக்காளி தோசை செய்முறை!

mukesh M

உடுப்பி தக்காளி தோசை!

தக்காளியுடன் ரவை, அரிசி மாவு மற்றும் சில மசாலா பொருட்கள் சேர்த்து சுவையான தோசை ஒன்றினை தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

தக்காளி - 3 | சின்ன வெங்காயம் - 6 | பூண்டு பல் - 8 | அரிசி மாவு - 1 கப் | ரவை - 1/2 கப் | கோதுமை மாவு - 1/4 கப் | மிளகாய் பொடி - 1 ஸ்பூன் | உப்பு - 1 சிட்டிகை | சீரகம் - 1 ஸ்பூன் | கொத்தமல்லி - 1 கொத்து | எண்ணெய் - தேவையான அளவு

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட தக்காளியை சுத்தம் செய்து சிறு துண்டாக நறுக்கி மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்க்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 2

தொடர்ந்து இதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு பல் சுத்தம் செய்து சேர்த்து நன்கு விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

Image Source: istock

செய்முறை படி - 3

பின் இதடனுடன் அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை, மிளகாய் பொடி, உப்பு, தண்ணீர் சிறிதளவு சேர்த்து விழுதாக அரைத்து தனி ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

Image Source: istock

செய்முறை படி - 4

தொடர்ந்து எடுத்துக்கொண்ட கொத்தமல்லி தழைகளை பொடியாக நறுக்கி தயாராக உள்ள மாவில் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.

Image Source: pexels-com

செய்முறை படி - 5

இறுதியாக இதனுடன் சீரகம் சேர்த்து பதமாக கரைத்துக்கொள்ள தோசை மாவு ரெடி!

Image Source: istock

செய்முறை படி - 6

தற்போது தோசை சுட்டு எடுக்க தவா ஒன்றினை அடுப்பில் வைத்து சூடேற்றி, எண்ணெய் தேய்த்து தவாவினை தயார் செய்துக்கொள்ளவும்.

Image Source: istock

உடுப்பி தக்காளி தோசை ரெடி!

பின் தயாராக உள்ள தோசை மாவினை இதில் சேர்த்து பதமாக சுட்டு எடுக்க சுவையான உடுப்பி தக்காளி தோசை ரெடி. உங்களுக்கு பிடித்தமான சட்னி, சாம்பாருடன் சேர்த்து பரிமாறவும்!

Image Source: istock

Thanks For Reading!

Next: ‘மா - பலா பாயாசம்’ - செய்வது எப்படி தெரியுமா?

[ad_2]