Aug 14, 2024
கரம் மசாலா எனப்படுவது, உணவின் சுவையை கூட்ட பயன்படுத்தப்படும் ’ ‘அத்தியாவசிய மசாலா பொருட்களின் கலவை’ ஆகும். இந்நிலையில் இந்த மாசாலவை உணவில் அடிக்கடி சேர்ப்பதால் கிடைக்கும் நன்மை - தீமை என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
கரம் மசாலா தயாரிப்பில் சேர்க்கப்படும் கிராம்பு, மிளகு, பட்டை போன்றவை வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உண்டாக்குவதில் உதவுகிறது. மேலும், கிருமி தொற்றுகளை எதிர்த்து போராடவும் உதவி செய்கிறது!
Image Source: istock
கரம் மாசால தயாரிப்பில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் ஆனது சீரான குடல் இயக்கத்தை உறுதி செய்ய உதவுகின்றன. அந்த வகையில் வயிற்று உப்புசம், அஜீரணம், மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளை போக்க இது உதவுகிறது!
Image Source: istock
கரம் மசாலாவில் சேர்க்கப்படும் சீரகம் மற்றும் பல மசாலா பொருட்கள், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதுகின்றன. அந்த வகையில் இந்த கரம் மசாலாவை உணவில் சேர்ப்பது நீரிழிவை கட்டுக்குள் வைக்க உதவியாக இருக்கும்!
Image Source: istock
ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைந்து காணப்படும் இந்த கரம் மசாலாவின் நுகர்வு ஆனது சரும செல்களின் சேதங்களை குறைப்பதோடு, செல்களின் மீள் உருவாக்கத்திற்கும் உதவுகிறது. அந்த வகையில் பல்வேறு வகை சரும பிரச்சனைகளை இது தடுக்கிறது!
Image Source: istock
ஆய்வுகளின் படி கூடுதல் கலோரிகளை எரிக்கும் பண்பு கரம் மசாலாவில் காணப்படுகிறது. அந்த வகையில் இதன் முறையான நுகர்வு ஆரோக்கிய உடல் எடை மேலாண்மையில் உதவி செய்கிறது!
Image Source: istock
கரம் மசாலா தயாரிப்பில் சேர்க்கப்படும் மிளகு, ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது. அந்த வகையில் புற்றுநோய்க்கு காரணமான செல்களின் பரவலையும் இது தடுக்க உதவுகிறது!
Image Source: pexels-com
உணவில் கரம் மசாலா சேர்ப்பது நன்மைகள் பல அளிக்கும் அதே நேரம், எதிர்பாரா பக்க விளைவுகளையும் அளிக்கிறது. அந்த வகையில் நெஞ்செரிச்சல் - அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்குகிறது!
Image Source: istock
கரம் மசாலாவை அளவுக்கு மிகுதியாக உணவில் சேர்ப்பது, மசாலா பொருட்களை சமசீரற்ற நிலையில் எடுத்துக்கொள்வதற்கு சமம். இது, வயிற்று போக்கு - வாந்தி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்!
Image Source: istock
Thanks For Reading!