Jun 13, 2024
சந்தையில் கிடைக்கும் அனைத்து விதமான பொருட்களிலும் கலப்படம் இயல்பாகிவிட்ட நிலையில்; நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் உள்ள கலப்படத்தை கண்டறிவது எப்படி? என்பது குறித்து இங்கு நாம் காணலாம்!
Image Source: istock
பாலில் தண்ணீர் கலந்து இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய ஒரு சமதள பரப்பில் ஒரு சொட்டு பாலை விடவும். பால் அப்படியே இருந்தால் இது கலப்படமில்லாத பால். ஆனால் பாலில் உள்ள வெண்மை நிறம் நீங்கி தனியாக பிரிந்து வந்தால் அது கலப்படம் செய்யப்பட்ட பால்.
Image Source: pexels-com
ஒரு டம்ளரில் 10 மில்லி அளவு பாலை எடுத்துக் கொள்ளுங்கள். அதே அளவு தண்ணீரை எடுத்து, இதை இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளவும். பாலுடன் சலவை தூள் கலந்து இருந்தால் பாலின் மேற்பகுதியில் தடிமனான படலமும், பாலில் கலப்படம் இல்லை என்றால் மெலிதான படலமும் உருவாகும்.
Image Source: istock
ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஒரு கரண்டி நெய் அல்லது வெண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் அயோடின் கரைசல் மூன்று சொட்டுக்கள் சேர்க்க வேண்டும். நெய்யின் நிறம் நீல நிறத்தில் மாறினால் அதில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
Image Source: istock
காபி தூளில் கலப்படம் இருப்பதை அறிய ஒரு கண்ணாடி டம்ளரில் சிறிதளவு நீருடன் ஒரு டீஸ்பூன் காபித்தூள் சேர்த்து கலக்கவும். காபித்தூள் அப்படியே மேல் பகுதியில் மிதந்தால் அது கலப்படம் இல்லாத காப்பி தூள்; தண்ணீரில் கரைந்து நிறம் மாறினால் அது கலப்படம் செய்யப்பட்ட தூள்.
Image Source: istock
ஒரு கண்ணாடி தட்டில் சிறிதளவு டீ தூளை எடுத்துக் கொள்ளவும். பின் இதனருகே காந்தகம் ஒன்றை கொண்டு செல்ல வேண்டும். சுத்தமான தேயிலையாக இருந்தால் அந்த தூள்கள் காந்தத்தை நோக்கி ஈர்க்கப்படாது. கலப்படமான டீத்தூளாக இருந்தால் காந்தத்தில் அந்த துகள்கள் ஒட்டிக் கொள்ளும்.
Image Source: istock
மஞ்சள் தூளில் செயற்கையான வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிய சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் நீர் சேர்த்து நன்றாக கலக்கவும். இயற்கையான மஞ்சள் பொடியாக இருந்தால் அடியில் படியும்போது வெளிர்மஞ்சள் நிறத்தில் இருக்கும். கலப்படமாக இருந்தால் அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
Image Source: istock
மிளகாய் பொடியில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய சிறிதளவு தண்ணீரில் மிளகாய் பொடியை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மிளகாய் பொடியில் மரத்தூள் சேர்க்கப்பட்டிருந்தால் அது நீரின் மேற்பரப்பில் மிதக்கும். சுத்தமான மிளகாய் பொடியாக இருந்தால் நீரின் அடியில் படியும்.
Image Source: istock
பப்பாளி விதைகளும் மிளகும் ஒரே மாதிரி இருப்பதால் அதன் கலப்படத்தை கண்டுபிடிப்பது கடினம். எனினும், ஒரு கிளாஸ் நீரின் உதவியுடன் இதனை கண்டறியலாம். நீரில் மிளகை சேர்க்க கலப்படம் செய்யப்பட்ட பப்பாளி விதை நீரில் மிதக்கும், மிளகு அடிப்பகுதிக்கு செல்லும்.
Image Source: istock
Thanks For Reading!