May 2, 2024
வெல்லத்தில் இரும்பு, கால்சியம் மட்டுமின்றி ஏராளமான வைட்டமின்கள் உள்ளது. அதனை உணவுக்கு பிறகு சாப்பிடுவது உடலுக்கு இரட்டிப்பு பலன்களை தருவதாக கருதப்படுகிறது. அதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
உணவுக்கு பிறகு வெல்லம் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தக்கூடும். அதிலுள்ள sucrose எனும் இயற்கை சர்க்கரை, குடல் இயக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை போக்க செய்கிறது
Image Source: istock
வெல்லத்தில் உள்ள பொட்டாசியம் உள்ளடக்கம், ரத்த அழுத்தம் அளவை இயற்கையான முறையில் குறைத்திட உதவுகிறது. உணவுக்கு பிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டு வந்தால், இதய நோய் ஏற்படும் அபாயமும் குறையக்கூடும்
Image Source: pexels-com
வெல்லம், இரும்புச்சத்தின் சிறந்த ஆதாரமாகும். அதனை உணவுக்கு பிறகு சாப்பிடுவது, இரும்புச் சத்தை அதிகரித்து அனீமியா அபாயத்தை முற்றிலும் குறைக்கக்கூடும்
Image Source: istock
உணவுக்கு பின் வெல்லம் சாப்பிடுவது, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. குறிப்பாக, கல்லீரலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றிட மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
Image Source: istock
வெல்லம், அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. அதனை தினமும் சாப்பிட்ட பிறகு உட்கொள்வது, வீக்கத்தை போக்க செய்வதோடு ஆர்த்ரிடைஸ் போன்ற மூட்டு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற உதவக்கூடும்
Image Source: istock
வெல்லத்தின் மக்னீசியம் உள்ளடக்கம், நரம்புகளை அமைதிப்படுத்த செய்கிறது. மன அழுத்தத்தை போக்கி மனநிலையை மேம்படுத்த உதவுகிறது
Image Source: istock
நம்மில் பலருக்கும் சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிட ஆசை வரக்கூடும். அதற்காக சாக்லேட், ஸ்வீட் போன்றவற்றை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தையும் வாய் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். இதற்கு வெல்லம் சிறந்த தேர்வாக திகழ செய்கிறது
Image Source: istock
வெல்லத்தில் ஜிங்க், செலினியம் போன்ற மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவக்கூடும். உணவுக்கு பிறகு தொடர்ச்சியாக வெல்லம் சாப்பிடுவது, உடலை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கக்கூடும்
Image Source: istock
Thanks For Reading!