May 3, 2024
உண்ணும் உணவை வேகவேகமாக மென்று விழுங்கும் நபர்கள் பொதுவாக எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன? ஆபத்துக்கள் என்ன? இந்த பழக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி? என இங்கு நாம் காணலாம்!
Image Source: istock
உணவை உணர்வதற்கு நேரம் அளிக்காமல் வேகவேகமாக மென்று விழுங்குவது மனதளவிலும், உடலளவிலும் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்!
Image Source: istock
உணவை வேகவேகமாக உட்கொள்வது அளவுக்கு மிகுதியான உணவு உட்கொள்ளலுக்கு வழிவகுக்கும். இதன் விளைவாக உடல் எடை கூடுதல், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்பட கூடும்.
Image Source: istock
உண்ணும் உணவின் செரிமானத்திற்கு உமிழ்நீரின் சுரப்பு அவசியம். உணவை வேகமாக உட்கொள்ளும் போது போதுமான உமிழ்நீர் சுரப்பு உண்டாவது இல்லை - அந்த வகையில் இந்த பழக்கம் செரிமான செயல்பாட்டை பாதிக்கிறது.
Image Source: istock
உணவுகளை வேகவேகமாக உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவு உயர்வுக்கு வழிவகுக்க கூடும். குறிப்பாக, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை வேகமாக உட்கொள்ளும் போது இந்த பிரச்சனை உண்டாகிறது.
Image Source: pexels-com
வேகவேகமாக உணவுகளை உட்கொள்ளும் போது உடல் இயக்கம் (தாடை பகுதியின் இயக்கம்) அதிகரிப்பதோடு, இரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. இது, இதய துடிப்பு அதிகரிப்பதற்கும் காரணமாகிறது!
Image Source: istock
உணவுகளை வேகவேகமாக உட்கொள்ள முயற்சிக்கும் போது நம்மை அறியாமல் நாம் அளவுக்கு மிகுதியாக காற்றை சுவாசிக்கின்றோம். இது ஒரு சில சமயங்களில் மூச்சு திணறல், உணவு குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது!
Image Source: istock
உணவை அப்படியே விழுங்குவதை தவிர்த்து முழுவதுமாக மென்று பின் விழுங்குவது இந்த பழக்கத்தை படிப்படியாக மாற்றிக்கொள்ள உதவியாக இருக்கும்.
Image Source: istock
உட்கொள்ளும் உணவில் முழு கவனத்தை செலுத்தி முழுமையாக உணர்ந்து உட்கொள்வது அவசியம். கவனச்சிதறலுக்கு வழிவகுக்கும் தொலைக்காட்சி, கைப்பேசி போன்றவற்றை தவிர்ப்பது நல்லது!
Image Source: istock
Thanks For Reading!