Jul 30, 2024
உதடுகள் அடிக்கடி வறண்டு போகும் பிரச்சனை பலருக்கு உண்டு. ஆனால் அதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து பலருக்கும் விழிப்புணர்வு இல்லை. அதன் குறித்த விவரங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து தற்போது நாம் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Image Source: istock
மழைக்காலங்களில் மக்கள் குறைந்தளவில் தான் தண்ணீர் குடிக்கிறார்கள். அதனால் உடலின் நீர்சத்து பெருமளவில் குறைந்து விடுகிறது. இதனால் உதடுகள் காய்ந்து அதன் மேலுள்ள தோல் உரிந்து எரிச்சலை ஏற்படுத்துகிறது.
Image Source: istock
அவ்வாறு வறண்டு போகும் பட்சத்தில் நம்முள் பலர் நாக்கினால் உதடுகளை ஈரம் செய்வர். ஆனால் இது தவறு, இப்படி ஈரம் செய்தால் உதடுகளில் வெடிப்புகள் ஏற்படும். அதனால் இவ்வாறு செய்யாமல் உதடுகளை ஈரப்பதமாக வைக்க வேறு சில டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.
Image Source: istock
நாம் தினமும் தூங்க செல்வதற்கு முன்னர் உங்கள் உதடுகளில் சுத்தமான தேங்காய் எண்ணெய்யை தேய்த்து கொள்ளுங்கள். இது உங்கள் உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். அப்படி இல்லையெனில் ரசாயனம் கலக்காத லிப் பாம்களையும் பயன்படுத்தலாம்.
Image Source: istock
நல்லெண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று நமக்கு தெரியும், ஆனால் இந்த எண்ணெய் உதடுகளை பராமரிப்பதிலும் பெரும் பங்கினை வகிக்கிறது. நல்லெண்ணெய்யை உதடுகளில் தடவுவதன் மூலம் உடலிலுள்ள உஷ்ணங்களை உறுஞ்சி எடுத்து உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.
Image Source: istock
வறண்ட உதடுகளின் மேல் கற்றாழை ஜெல் தடவி நன்கு மசாஜ் செய்து கொடுங்கள். இது உதடுகளுக்குள் ஊடுருவி ஈரப்பதத்தை கொடுக்கும். உதடுகளிலுள்ள இறந்த செல்களை நீக்கி பொலிவுடன் வைக்கவும், உதடுகளை நீரேற்றமாக வைக்கவும் உதவும்.
Image Source: istock
உதடுகளில் அடிக்கடி வாஸ்லின் பயன்படுத்தலாம், உதடுகள் வறண்டு போகாமல் இருக்க இது பயன்படுகிறது. ஆனால் அவ்வாறு வாஸ்லின் தடவுவதற்கு முன்னர் சிறிதளவு சுத்தமான தேனை தடவி அதன் மேல் வாஸ்லின் தடவினால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.
Image Source: Samayam Tamil
மழைக்காலம் என்பதால் தண்ணீர் தாகம் பெரிதளவில் ஏற்படாது, அதனால் பலரும் தண்ணீர் குடிப்பதையே மறந்து விடுகிறார்கள். இதனால் உடல் மற்றும் உதடு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைகிறது. தாகமே எடுக்கவில்லை என்றாலும் அதிகளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
Image Source: istock
உதடுகளின் வறட்சியை நீக்க நமது உணவு முறைகளிலும் மாற்றம் செய்வது அவசியம், நல்ல சத்தான, நீரேற்றம் அளிக்கக்கூடிய உணவுகளை அதிகளவில் எடுத்து கொள்ளுங்கள். இதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் பட்சத்தில் உதடுகள் வறட்சியடையும் பிரச்சனை குணமாகும்.
Image Source: istock
Thanks For Reading!