Jun 20, 2024
ஸ்ட்ராபெர்ரி பழங்கள் சருமத்தை அழகாக வைக்க உதவுகிறது. இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளன. எனவே ஸ்ட்ராபெர்ரி பழங்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் வீட்டிலேயே லிப் பாம் தயாரிக்கலாம். அதை எப்படி என பார்ப்போம்.
Image Source: istock
3-4 ப்ரஷ்ஷான ஸ்ட்ராபெர்ரி பழங்கள், 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், 1 தேக்கரண்டி தேன், 1 விட்டமின் ஈ எண்ணெய் மாத்திரை, லாவெண்டர் அல்லது ரோஸ்ஷிப் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துகொள்ளுங்கள்
Image Source: pexels-com
முதலில் 3-4 புதிய ஸ்ட்ராபெர்ரிகளை எடுத்து நன்றாக சுத்தம் செய்து அழுக்குகளை எல்லாம் நீக்கிக் கொள்ளுங்கள். பிறகு அதை பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள்.
Image Source: istock
பிறகு அந்த ஸ்ட்ராபெர்ரி சாற்றை வடிகட்டிக் கொள்ளுங்கள். ஸ்ட்ராபெர்ரி சாறு லிப் பாமிற்கு இயற்கையான நிறத்தை கொடுக்கிறது.
Image Source: istock
ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் தேங்காய் எண்ணெயை சூடாக்குங்கள். தேங்காய் எண்ணெய் உருகும் வரை கிளற வேண்டும்.
Image Source: istock
ஸ்ட்ராபெர்ரி சாற்றுடன் தேன், வைட்டமின் ஈ மாத்திரை, தேங்காய் எண்ணெய் மற்றும் லாவெண்டர் எண்ணெய் சில துளிகள் சேர்த்து நன்கு கலக்குங்கள்.
Image Source: istock
நன்றாக கெட்டியாக வந்ததும் ஸ்ட்ராபெர்ரி லிப் பாமை ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து வையுங்கள். இந்த லிப் பாமை சிறுதளவு எடுத்து உதடுகளில் அப்ளை செய்து வாருங்கள்.
Image Source: pexels-com
இந்த லிப் பாமில் வைட்டமின் ஈ எண்ணெய்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இது உதடுகளை ஹைட்ரேட்டிங் செய்ய உதவுகிறது. உதடுகளுக்கு ஈரப்பதத்தை வழங்குகிறது.
Image Source: istock
நீங்கள் எதாவது பார்ட்டி அல்லது நிகழ்ச்சிகளுக்கு போனால் கூட எளிதாக எடுத்துச் செல்லலாம். தேவைப்படும் போது எளிதாக இதை நீங்கள் பயன்படுத்தலாம்.
Image Source: istock
Thanks For Reading!