Aug 19, 2024
முகத்தை அழகாக மாற்றுவதில் உதடுகள் முக்கிய வகிக்கிறது. அவற்றை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க எந்த எண்ணெய்களை பயன்படுத்தலாம் என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
லாவெண்டர் எண்ணெய் உதட்டில் வறட்சியை போக்க உதவக்கூடும். அதேநேரம், புதினா எண்ணெய் உதட்டின் ஓரங்களில் புண்கள் குணப்படுத்த உதவக்கூடும். இந்த எண்ணெய் கலவை வெடிப்பை சரிசெய்து மென்மையான உதடுகளுக்கு வழிவகுக்கும்
Image Source: istock
முதலில் ஒரு கடாயில் ஷியா வெண்ணெய் ஊற்றி உருகவிடவும். அடுத்து, சில சொட்டுக்கள் லாவெண்டர் ஆயில் மற்றும் புதினா எண்ணெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். கலவை ஆறியதும் சிறிய கிளாஸூக்கு மாற்றி தினமும் 2 முறை அப்ளை செய்யலாம்
Image Source: pexels-com
தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் இயற்கை மாய்ஸ்சுரைசராக செயல்படக்கூடும். அதேநேரம், எலுமிச்சை எண்ணெய் உதட்டில் கருமையை போக்கி சிவப்பான உதடுகளுக்கு வழிவகுக்கும்
Image Source: istock
முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்க வேண்டும். அத்துடன் அரை டீஸ்பூன் பாதாம் மற்றும் எலுமிச்சை எண்ணெயை சேர்க்க வேண்டும்
Image Source: istock
பிறகு, கலவையின் சத்துக்களை அதிகரிக்க ஒரு டீஸ்பூன் தேனை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். இந்த கலவையை பெரும்பாலும் உதடுகள் வறண்டு இருந்தால் அப்ளை செய்யலாம்.
Image Source: istock
விளக்கெண்ணெய் உலர்ந்த உதடுகளை ஈரப்பதமாக்க பயன்படுகிறது. அதேநேரம், ரோஸ் ஆயில் உதடுகளை பட்டு போன்று மென்மையாக்குவதோடு நல்ல நறுமணத்தை தரக்கூடும்
Image Source: istock
முதலில் ஒரு கிளாஸ் ஜாரில் விளக்கெண்ணெய் மற்றும் ரோஸ் ஆயிலை ஒன்றாக சேர்க்க வேண்டும். அத்துடன் கொஞ்சம் கோகோ பட்டர் சேர்க்க வேண்டும்
Image Source: istock
இறுதியாக, வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். இதனை சுத்தமான உதட்டில் தினமும் 2 முறை அப்ளை செய்தால் நிச்சயம் நல்ல பலனை காணலாம்
Image Source: pexels-com
Thanks For Reading!