May 17, 2024
மருத்துவர் பரிந்துரைத்த வரம்பை விட, உங்க ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாக இருக்கும் பட்சத்தில், உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகும். ஏனெனில், உயர் ரத்த அழுத்தம் உயிருக்கு ஆபத்தான பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்
Image Source: pexels-com
உடல்பருமன், மன அழுத்தம், உடல் செயல்பாடு இல்லாமை, புகைப்பிடித்தல், அதிகமான உப்பு உணவுகள் சாப்பிடுவது மற்றும் குடும்ப வரலாறு ஆகியவை உயர் ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கான முக்கிய காரணிகளாக திகழ்கிறது
Image Source: istock
மாரடைப்பு, பக்கவாதம் காரணமாக அதிகமானோர் உயிரிழப்பதற்கு, தமனி சுவர்களை சேதப்படுத்தும் உயர் ரத்த அழுத்தம் முக்கிய காரணமாகும். தமனிகளில் பிளேக் படிதல் அதிகமாகி, ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு அல்லது பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது
Image Source: istock
இதய தமனி தடிமனாக அல்லது குறுகலாக இருந்தால், ரத்த சுழற்சியில் இதயம் சிரமத்தை சந்திக்கும். கூடுதல் பணிச்சுமையால் பிற உறுப்புகளுக்கு ரத்த செல்வது தடைப்பட்டு இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு உடனடி சிகிச்சை அவசியமாகும்
Image Source: istock
உயர் ரத்த அழுத்தம் தொடர்ச்சியாக அதிகரிக்கும் போது, ஆண்களிடையே விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்பட செய்யலாம். அதேபோல், பெண்களுக்கு பாலியல் செயல்பாட்டின் ஈடுபாடு குறையக்கூடும்
Image Source: freepik-com
இதயத்திற்கு போதுமான ரத்த கிடைக்காத போது, நெஞ்சு வலி ஏற்படக்கூடும். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள், உச்சியை நோக்கி நடப்பது, மேலே ஏறுவது போன்ற செயலில் ஈடுபடுவது ரத்த அழுத்தம் அளவை அதிகரித்து நெஞ்சு வலிக்கு வழிவகுக்கலாம்.
Image Source: istock
உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற சிறுநீரகம் பயன்படுகிறது. ஆனால், உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்திற்கு அருகில் உள்ள தமனிகளில் சேதத்தை ஏற்படுத்தி சிறுநீரக கோளாறுக்கு வழிவகுக்கலாம். அவர்கள் உயிர்வாழ டயாலிசிஸ் அல்லது மாற்று அறுவை சிகிச்சை அவசியமாகும்
Image Source: istock
உயர் ரத்த அழுத்தம், கண்களில் உள்ள சிறிய ரத்த நாளங்களில் சேதத்தை உண்டாக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. சிலருக்கு நிரந்தர பார்வை இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. ரத்த அழுத்தத்தை முறையாக பராமரிப்பது கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகும்
Image Source: istock
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த, ஆரோக்கியமான உணவுகள் உட்கொள்வது, தினமும் உடற்பயிற்சி செய்வது மற்றும் மன அழுத்தத்தை போக்கும் மூச்சுப்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். இதுதவிர, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளும் தவறாமல் உட்கொள்ள வேண்டும்
Image Source: istock
Thanks For Reading!