Jul 31, 2024
காலை உணவில் பலரும் உருளைக்கிழங்குடன் அவித்த முட்டை சேர்த்து உட்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில், இதன் நன்மை தீமைகள் குறித்து இங்கு நாம் காணலாம்.
Image Source: istock
புரதச்சத்தின் சிறந்த ஆதாரமாக இருக்கும் முட்டைகளை உருளைக்கிழங்குடன் சேர்த்து சாப்பிடுவது போதுமான புரத சத்தை அளிக்கிறது. இந்த போதுமான அளவு புரதம் தசைகளின் கட்டமைப்புக்கு உதவுகிறது!
Image Source: istock
உருளைக்கிழங்குடன் முட்டை உட்கொள்வது வயிற்றின் முழுமையை உறுதி செய்கிறது. குறிப்பாக, குறைந்தளவு உணவில் முழுமையான ஊட்டங்களை அளிக்கும் ஒரு ஜோடியாக இது பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இது எடுத்துக்கொள்ளும் உணவின் அளவை குறைத்து, ஆரோக்கிய உடல் எடை பராமரிப்பில் உதவுகிறது.
Image Source: istock
முட்டையில் காணப்படும் கோலின் எனும் உள்ளடக்கம் மூளையின் ஆரோக்கியம் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேநேரம் உருளைக்கிழங்கு மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஹார்மோன் சுரப்புக்கு உதவுகிறது!
Image Source: istock
மாவுச்சத்து நிறைந்த உருளைக்கிழங்கை புரதம் நிறைந்த முட்டைகளுடன் சேர்த்து உட்கொள்வது - உணவுக்கு பின் அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவுக்கு காரணமாக அமையலாம்.
Image Source: pexels-com
முட்டையின் மஞ்சள் கருவில் காணப்படும் கொலஸ்டரால் உள்ளடக்கம் - உருளைக்கிழங்குடன் சேரும்போது இரத்த கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம். இது இரத்த அழுத்தம், இதய ஆரோக்கியம் பாதிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்!
Image Source: istock
முட்டை, உருளைக்கிழங்கு என இரண்டும் ஒவ்வாமை பண்பு கொண்டிருக்கும் நிலையில் - இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து (அளவுக்கு மிகுதியாக) எடுத்துக்கொள்வது ஒவ்வாமை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்!
Image Source: istock
முட்டையின் போதுமான புரத உள்ளடக்கம் மற்றும் உருளைக்கிழங்கின் ஸ்ட்ராச் இரண்டும் ஒன்றிணையும் போது ஒரு சிலருக்கு செரிமான சிக்கல்களை உண்டாக்க கூடும்.
Image Source: istock
முட்டை, உருளைக்கிழங்கு என இரண்டும் வாய்வு பிரச்சனைக்கு வழிவகுக்கும் உணவு பொருட்கள் ஆகும். இந்நிலையில், இவை இரண்டையும் ஒன்றாக இணைத்து (அளவுக்கு மிகுதியாக) எடுத்துக்கொள்வது வாய்வு பிரச்சனையை உண்டாக்கும்!
Image Source: istock
Thanks For Reading!