May 30, 2024
By: Anojஅரிதான, வழக்கத்திற்கு மாறான பல சமயங்களில் காட்டு இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள் கவர்ச்சியானதாகக் கருதப்பட்டு செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டால் அவை 'எக்ஸாடிக்' செல்லப்பிராணிகள் ஆகும். அவற்றை வளர்ப்பதற்கு முன்கூட்டியே அனுமதி வாங்குவது அவசியமாகும்
Image Source: pexels-com
டராண்டுலாஸ் பெரிய மற்றும் அதிக ரோமம் கொண்ட சிலந்தி வகையாகும். இவை பல வண்ணங்களில், பல நிறங்களில் காண்போரின் கண்களைக் கவரும் வகையில் உள்ளன. இவை 10 முதல் 30 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியவை.
Image Source: pexels-com
இது பாலைவனத்தில் வாழும் நரி இனம் ஆகும். மிகச்சிறிய உருவ அமைப்பைக் கொண்ட இது அல்சீரியா நாட்டின் தேசிய விலங்காகும். மிகவும் விலை உயர்ந்த இது சகாரா மற்றும் அரேபியப் பாலைவனங்களில் காணப்படுகின்றது.
Image Source: pexels-com
செர்வல் ஆப்பிர்க்காவை சேர்ந்த ஒரு காட்டுப் புனை. மிகவும் சுறுசுறுப்பான இது ஒரு மாமிச உண்ணி. பார்ப்பதற்குச் சிறிய சிறுத்தையைப் போல் இருக்கும் இது ஒரு வேட்டை மிருகம் என்பதால் முறையான அனுமதி பெற்றே இதை வளர்க்க முடியும்.
Image Source: pexels-com
மிகச் சிறிய பாசம் வகையைச் சார்ந்த இதற்கு சர்க்கரை மீதுள்ள அதீத விருப்பமும், பறக்கும் அணிலின் தோற்றமுமே சுகர் கிளைடர் பெயரைப் பெற்றுத் தந்தது. கூட்டமாக மட்டுமே வளர்க்க வேண்டிய இது தனிமை விரும்பி அல்ல.
Image Source: pexels-com
ஆப்ரிக்காவைச் சேர்ந்த இது வெள்ளை நிற சிங்கமாகும். மிகவும் விலை உயர்ந்த இது பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு என்பதால் இவற்றை வளர்க்க அனுமதி பெறுவது என்பது மிகவும் கடினம்.
Image Source: pexels-com
இது பல்லி இனத்தைச் சார்ந்த ஊர்வன வகையாகும். கழுத்தில் தாடி போன்ற சரும அமைப்பைக் கொண்ட இது மிகவும் அமைதியான பராமரிக்க எளிமையான செல்லப்பிராணி.
Image Source: pexels-com
பந்துப்போல் சுருண்டு கொள்ளும் சுபாவத்தைக் கொண்ட இது நச்சுத்தன்மையற்ற மிகச் சிறிய மலைப்பாம்பு இனமாகும். பாம்பு விரும்பிகளுக்கு ஏற்ற செல்லப்பிராணி இது.
Image Source: pexels-com
நீர் வாழ் சாலமண்டர் வகையான இது அவற்றின் தனித்துவமான தோற்றம் மற்றும் எளிமையான பராமரிப்பின் காரணமாக விரும்பப்படுகிறது.
Image Source: pexels-com
Thanks For Reading!