[ad_1] உலகின் சிறந்த புனரமைக்கப்பட்ட கட்டிடங்கள்

Aug 3, 2024

உலகின் சிறந்த புனரமைக்கப்பட்ட கட்டிடங்கள்

Pavithra, Samayam Tamil

வரலாற்றுக் கட்டிடங்கள்

பண்டைய காலத்தில் அரசர்களின் வாழ்விடமாகவோ அல்லது அரசாங்க கட்டிடங்களாகவோ இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள் பல பயனுள்ள முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.

Image Source: instagram-com

பெர்லின் நூலகம்

ஜெர்மன் படைகளின் அயுதக் கிடங்காக இருந்த கட்டிடம், 20 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் பயன்பாடின்றி கிடந்தது. பின்னர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடம் நூலகமாக மாற்றப்பட்டது.

Image Source: instagram-com/ann_novva

Kaos Temple

டென்மார்க்கில் அமைந்துள்ள முன்னாள் தேவாலயமான இந்த கட்டிடத்தின் அமைப்பு பாதிக்காத வகையில் 2018 ஆம் ஆண்டில் ஸ்கேட்போர்ட் பூங்காவாகப் புனரமைப்பு செய்யப்பட்டது.

Image Source: instagram-com/mariadetiketa

ஆடேனியோ கிரான்ட் ஸ்ப்ளெண்டிட்

அர்ஜெண்டினாவில் உள்ள இந்த கட்டிடம் பிரமிக்க வைக்கும் வடிவமைப்பையும், கம்பீர தோற்றத்தையும் கொண்டது. 2000 ஆம் ஆண்டு வரை திரையரங்காக இருந்த இந்த கட்டிடம் நூலகமாக மாற்றப்பட்டது.

Image Source: instagram-com/buenosairesbus

பாரிஸ் ஆர்சே அருங்காட்சியகம்

1939 ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்த இந்த ரயில் நிலையம் 1970 ஆம் ஆண்டில் கலை அருங்காட்சியமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு 1986 ஆம் ஆண்டில் பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது.

Image Source: instagram-com/mpr_152

Boekhandel Selexyz Dominicanen

15 ஆம் நூற்றாண்டில் கோத்திக் பாணியில் கட்டப்பட்ட தேவாலயமான இந்த வரலாற்றுக் கட்டிடம் 2006 ஆம் ஆண்டில் செலெக்ஸிஸ் எனும் டச்சு நிறுவனத்தால் புத்தகக் கடையாகப் புனரமைக்கப் பட்டது.

Image Source: instagram-com/ritola67

த லிபர்ட்டி ஹோட்டல்

பொஸ்டனில் அமைந்திருக்கும் இந்த தங்கும் விடுதி 120 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைச்சாலையாகச் செயல்பட்டு வந்தது. நகரின் பிரபல அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இது அதன் கட்டிடக்கலைக்குப் பெயர் பெற்றது.

Image Source: instagram-com/boston_commoner

லண்டன் டேட் மாடர்ன்

லண்டனின் சிறந்த நவீன கலை அருங்காட்சியமாக இருக்கும் இது 1981 ஆம் ஆண்டு வரை மின் உற்பத்தி நிலையமாகச் செயல்பட்டு வந்தது. இது மூலக் கட்டிடத்தின் அசல் தன்மையை பெரும்பாலும் பாதுகாத்துள்ளது.

Image Source: instagram-com/tatecollective

Tivoli Gardens

டென்மார்க்கில் உள்ள இந்த பூங்கா 1600 ஆம் ஆண்டுகளில் ராணுவ முகாமாக இருந்தது. பின்னர் 1847 இல் ரோலர் கோஸ்டர்கள் போன்ற பொழுதுப்போக்கு அம்சங்கள் சேர்க்கப்பட்டு விளையாட்டு பூங்காவாக மாற்றப்பட்டது.

Image Source: instagram-com/andoreia

Thanks For Reading!

Next: கேரளாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய கம்பீரமான 'கோட்டைகள்'

[ad_2]